பெரும்பாலும் ஓரளவு படித்த மற்றும் சமூக பொருப்புள்ள இளைஞர்கள், எந்த ஒரு விசயத்த எடுத்தாலும் யோசிச்சு, புரிஞ்சு செயல்படனும்னு நினைக்கிற புத்திசாலிகளாவே இருக்காங்க. ஆனா, நம்ம சமூகத்தில ஒரு ஆரோக்கியமான அறிவியல் புரச்சூழல் இல்லாத காரணத்தால அவங்களோட இந்த புத்திசாலித்தனமே அவர்களோட பலவீனமாவும் போயுடுது. இந்த மாதிரி இளைஞர்களை ரொம்ப அழகா இந்த மார்டன் சாமியார்கள் தங்கள் பக்கம் இழுத்துக்கறாங்க. தியானம், யோகாசனம் மாதிரியான மூளை மற்றும் உடலுக்கான பயிர்ச்சிகள்தான் இந்த ஹைடெக் குருக்களோட தூண்டில். தியானமோ, யோகாசனமோ இவையெல்லாம்மனதையும், உடலையும் சீராக்குகிற பயிர்ச்சி அப்படீங்கற வட்டத்த தாண்டி மூடநம்பிக்கை அப்படீங்கற வலையத்துக்குள்ள போய் சிக்கிக்கும்போதுதான் பிரச்சினை.
என்னோட சொந்த அனுபவத்திலேயே பல உதாரணங்கள நான் பாத்துருக்கேன், பாத்துட்டும் இருக்கேன். இந்தமாதிரி போகிறவர்கள் பெரும்பாலும் ஒரு மாயமான, கற்பணை உலகத்துல வாழ ஆரம்பிச்சுடறாங்க. அதுக்கப்பரம், 'மஞ்ச கண்ணாடி' மாட்டின கததான். எதப்பாத்தாலும் மஞ்சல்தான். கொஞ்ச நாள் முன்னாடி இப்படி ஒரு நண்பர்கிட்ட பேசிக்கிட்டிருந்தப்போ, அவர் சொன்னார், நம்ப உடம்ப சுத்தி ஒரு மெல்லிய கண்ணுக்கு தெரியாடத லேயர் இருக்கும் விடுதலை (நான் தான்), அதுதான் நம்ம நிரைய ஆபத்துகள்லேந்து காப்பாத்தும். அதை ஆரோக்கியமா வெச்சிக்கவேண்டியது ரொம்ப முக்கியம். தியானத்தின் மூலமா இது முடியும்னாரு. என்ன பேசரீங்க நட்பு (பேர் சொல்ல விரும்பல :(), இதெப்படி சாத்தியம் யார் சொன்னா இத உங்களுக்குன்னு கேட்டேன். எங்க தியான வகுப்புல சொன்னாங்க, நீங்கதான் பயாலஜிஸ்ட் (உயிரியல் நிபுனன்) ஆச்சே, இத பத்தி உங்களுக்கு தெரியாதா அப்படின்னு கேட்டாரு. இல்ல நட்பு அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது அப்படின்னேன். அவரும் விடாம, நம்ம தோளுக்கு மேல ஒன்னுமே இல்லயா, நல்லா யோசிச்சு பாத்து சொல்லுங்க அப்படின்னாரு. எனக்கு தெரிஞ்சு, நம்ம தோள்ல பல கோடிகணக்கான பாக்டீரியாக்கள்தான் வாழ்ந்துகிட்டிருக்குன்னு சொன்னேன். உடனே, 'அதான், அதேதான்; அததான் நாங்க சொல்றோம்'. 'இல்ல நட்பு, அது வெற, தவிர அதுக்காக நீங்க எதுவும் செய்யவேண்டாம், அது மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா விலங்குகளுக்கும் உண்டு; அதுக்கும் நீங்க தியானம் செய்யரதுக்கும் சுத்தமா சம்பந்தமே கிடையாது; தியானம் உங்க மூளை சம்பந்தபட்ட விசயம்', இது நான். அவர் விடுவதாக இல்லை, 'இல்ல விடுதலை, இத "சயின்டிபிக்கா புரூவ் பன்னிருக்காங்க" நம்புங்க'!!!! சரி, சயின்டிபிக்கா புரூவிருக்காங்கன்னா, எந்த சயின்டிபிக் ஜேர்னல்ல (ஆய்வுக்குறிப்புகள், ஆய்வுக்கட்டுரைகள் பதிப்பிக்கப்படும் ஆய்விதழ்கள்) பப்லிஷ் பன்னிருக்காங்கன்னு கேட்டேன். 'புரியல விடுதலை' அப்படீன்னார்.

அதுதாங்க விசயம், 'அறிவியல் நிரூபனம்' அப்படீன்னா என்னனே தெரியாமலேயே இத சொல்லி திருஞ்சுகிட்டிருக்காங்க நம்ப ஆளுங்க. உலகத்துல எந்த மூலையில் ஒரு ஆய்வு நடந்தாலும், அதோட முடிவுகள சர்வதேச ஆய்விதழ்கள்ள (Scientific journals) பதிப்பிக்கப்பட்ட பிறகுதான் அதை நிரூபனமாகக் கொள்ள முடியும். இந்த ஆய்விதழ்களுக்குன்னு பல ஆராய்ச்சியாளர்களைக்கொண்ட ஆசிரியர் குழு இருக்கும். அவங்களுக்கு சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக்குறிப்புகள், அல்லது கட்டுரைகள்ள சொல்லப்படிருக்குற அறிவியல் சோதனைகள், அந்த சோதனைகளுக்கு அந்த ஆராய்ச்சியாளர்கள் கையாண்ட முறைகள் இவைஎல்லாத்தையும் ஆசிரியர் குழு பரிசீலிக்கும். அந்த பரிசீலனையில் ஏற்படும் சந்தேகங்களை அந்த ஆய்வ மேற்கொண்ட ஆராய்ச்சியாலர்கள் சரியான முறையில் தெளிவு படுத்தினால்தான் அந்த ஆய்வுக்குறிப்போ, கட்டுரையோ ஆய்விதழ்கள்ள வெளியாகும். ஒரு ஆய்வை முழுமையா முடிக்க வருடக்கணக்காகும்னா, முடிச்ச ஆய்வ கட்டுரையா எழுதி, அத பரிசீலனைகளுக்குட்படுத்தி பதிப்பிக்கறதுக்கும் குறைந்தது 3 மாதத்துலேந்து 1 வருடம் வரை ஆகும்.
Nature,
Science,
PNAS,
Cell...இவையெல்லாம் உலகின் இரு சில சிறந்த ஆய்விதழ்கள். இந்த மாதிரி நூத்துக்கணக்குல இருக்கு. வெவ்வேறு துறைகளுக்கு வெவ்வேறு ஆய்விதழ்கள் உண்டு.
நல்ல பதிவு... :)
உங்க பதிவுகள சில திரட்டிகளோட இணைச்சுட்டா இன்னும் பலர் இதப்பத்தி எல்லாம் படிக்குறதுக்கு வாய்ப்பு இருக்கு... விருப்பமிருந்தால் முயற்சி செய்து பாருங்க