சட்டத்தை மதிக்காத காவல்துறையும், காப்பாத்த வந்த கருப்பு டி-சட்டைகளும்...!

இடுகையிட்டது: திங்கள், 18 அக்டோபர், 2010 by Viduthalai R Regina in லேபிள்கள்:
3

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு! இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு! இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு! இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு! இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு! இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு! இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு! இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு! இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு! இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு!

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடா??

இல்லை. நிச்சயமாக இல்லை. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு இல்லை என்பது தான் உண்மை - என்று சொன்னால், சணடைக்கு வருபர்கள் அதிகம். அவர்கள் பக்கம் சிறிது யோசிப்போம்; 1. இந்தியாவில், அனைத்து மத பண்டிகைகளுக்கும் அரசு விடுமுறை விடுகிறது. 2............................................................................................. வேறென்ன இருக்கிறது??? சரி, இதையும் சொல்வோம், இந்திய அரசின் சட்டங்கள் எல்லா மதத்தவருக்கும் ஒன்றே. அப்புரம், 3............. வேண்டுமென்றால் இதையும் சேர்த்துக்கொள்ளலாம், ராமன் பிறந்த இடம் (ராம ஜென்ம பூமி) / பாபர் மசூதி வழக்கில் இந்துக்களுக்கும், இசுலாமியர்களுக்கும் சரிசமமாக சட்டத்தை பிரித்துக்கொடுத்தது; இவை தவிர எனக்கு தெரிந்து வேறெதுவும் இல்லை.அதுதான், சட்டத்தில் இருக்கிறதே இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்று, போதாதா? போதுமா(??) என்பதுதான் இங்கு கேள்வி!

இந்தியாவில், ஜனநாயகம் என்று உலகத்தில் பலராலும் பரவலாக அறியப்படுகின்ற மக்களாட்சி முதற்கொண்டு, அனைத்து கொள்கைகளும் ஏட்டில் மட்டுமே எழுதிவைக்கப்பட்டிருக்கின்றன என்பதே இங்கு உண்மை, இந்த மதசார்பின்மை உட்பட. இங்கே ஒரு முக்கியமான ஒரு விளக்கம் தேவைபடுகிறது. மத சார்பின்மை என்பது, நம்ம அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் எல்லா மத சடங்குகளுக்கும் போய் கலந்து கொள்வது சிறப்பு செய்வது என்று பலபேர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். மதசார்பின்மை என்பது, எந்த மதத்தையும் சார்ந்து இல்லாமல் இருப்பது தான். ஆனால், மதசார்பின்மையை நல்ல மனம் கொண்ட பலர், எல்லா மதத்தையும் அரவனைத்துப்போவது என்று நினைத்துக்கொண்டிருப்பதுதான் பிரச்சினையே.

சரி, தலைப்புக்கு வருவோம். இப்போதான் சரவதி பூசை, ஆயுத பூசை எல்லாம் முடிஞ்சுது. பள்ளிகள்ள படிக்கிற பசங்க நோட்டு புத்தகத்தைஎல்லாம், பையிலேந்து எடுத்து, அம்மாப்பா, படிக்க சொல்லாம, சாமி மாடத்துல வெக்கசொல்ற சந்தோசமான நாள். ஆயுத பூஜைன்னா, அருவா, கத்தியில ஆரம்பிச்சு, மோட்டார் சைக்கில், காரு, பேருந்துன்னு எல்லாத்துலயும் மஞ்சலும் குங்குமமுமா வெச்சு கும்பிடுற நாள். இதெல்லாம் வீட்டிலே நடக்கற வரைக்கும் சரி! இது அரசு அலுவலகங்களுக்கு போறபோதுதான் சிக்கல் வருது. தனி மனிதனா, எந்த இறைவழிபாடோ, மதச்சடங்குகளையோ செய்யறதில எதுவும் தப்பில்லை. சட்டப்படியும் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனா, அரசு அலுவலகங்கள்ள இந்த வேலைய செய்யக்கூடாது அப்படீங்கறதுதான் சட்டம். அதுதான், சட்டத்தோட ஏட்டுபுத்தகத்துல இருக்குற சொரைக்காய்!

அப்படி, சட்டத்தோட ஏட்டுச்சொரைக்காயை காப்பாத்த இருக்குறதுதான் காவல்துறை அப்படிங்கற துறை. ஆனா, அங்கயே கொடும கூத்து கட்டி ஆடினா, யாரு கேக்கறது? அங்கதான் வந்தாங்க நம்ம கருப்பு டி-சட்டக்காரங்க! அதாங்க, கருப்பு டி-சட்டையில பெரியார் படமெல்லாம் போட்டுகிட்டு ஊருக்குள்ள சுத்திகிட்டிருகாங்களே அந்த பெரியார் தி.க - காரங்கதான். 

இந்தமாதிரி-இந்தமாதிரி சட்டப்படி இப்படி எல்லாம் பூசை, புணஸ்காரம் எல்லாம் அரசு அலுவலகங்கள்ள செய்யக்கூடாது, அதுனால இந்தமாதிரி-இந்தமாதிரி இந்த பூசை எல்லாம் சட்டச்சுறைக்காய காப்பத்தவேண்டிய காவல்துறையே செய்யக்கூடாது, செய்யாதீங்கன்னு கடிதம் மூலமா எழுதி கேட்டுக்கிட்டதை பொருட்பதுதாம ஐய்யமாரெல்லாம், கூப்பிட்டு, பூத்தோரணமெல்லாம் கட்டி, சாமிப்படமெல்லாத்தயும் தொடச்சு மாட்டி, டேசன்ல அடுக்கி வெச்சுருக்குற துப்பாக்கியெல்லாம் தொடச்சுவச்சு, சந்தனம் தடவி, குங்குப்பொட்டு  இட்டு, பொரியெல்லாம் செஞ்சு பூசை தொடங்க நேரம்பாத்துக்கிட்டிருந்த நேரமா பாத்து இந்த கருப்பு டி-சட்டகாரங்க கரடி மாதிரி வந்து எல்லாத்தயும் கவுத்துட்டாங்க; அதுதான் சேதி! கீழ புகைப்படமெல்லம் இருக்கு... பாருங்க! மேலதிகமா தெரியனும்னா, இங்க சொடுக்குங்க! வணக்க்க்ககககம்!

கொஞ்சம் அராஜகமாத்தான் இருக்குன்னாலும்,  அநாகரீகத்தவிட அராஜகம் மேல்னுதான் தோணுது! 3 கருத்துகள்:

  1. சட்டத்தை மதித்து நடந்த பெரியாரின் தொண்டர்களுக்கும் வாழ்த்துக்கள். ஒரு காவல் நிலையமே சூறையாடப்பட்டு சட்டம் காப்பாற்ற பட்டிருக்கிறது.

    இத்தனை வருடமாக கத்தியும் மக்களை மாற்ற முடியவில்லை, போய் பெரியார் செய்த பகுத்தறிவு வியாபரத்தை தொடருங்கள்..

  1. @ Dharan & தறுதலை:
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!