புத்தாண்டுத் தீர்மானம்!

இடுகையிட்டது: செவ்வாய், 30 டிசம்பர், 2014 by Unknown in
0

கிரிஸ் ஆஸ்டின் ஹேட்பீல்ட் - இவர் கணேடிய நாட்டைச்சேர்ந்த அந்நாட்டின் முதல் விண்வெளி வீரர். இவர் பூமியைச்சுற்றிக்கொண்டிருக்கும் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் பலமுறை பயனம் செய்து, தன்னுடைய கடைசி பயனத்தில் கமாண்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தன் விண்வெளி பயனத்தின் போது சமூக ஊடகங்களின் மூலம் மக்களுக்கு பூமியைப்பற்றிய பல அறிய தகவல்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டு அதன் மூலம் பிரபலமடைந்தவர். விண்வெளியில் இருந்து கிடார் வாத்தியம் இசைத்து பாடிய முதல் மனிதர் என்ற பெருமையும் பெற்றவர். விண்வெளி வீரர்கள் பலர் சமூக ஊடகங்களின் வழியாக மக்களை சென்றடைகின்றார்கள் என்றாலும், இவர் அளவுக்கு பிரபலமானவர்கள் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். அதர்க்கு ஒரு முக்கியமான காரணமாக நான் கருதுவது அவருடைய தகவல் பரிமாற்று திரண் (communication skill). தன்னுடைய எளிமையான அதேநேரத்தில் மற்றவரை சிந்திக்க வைக்கும் அவரின் பேச்சு மற்றும் எழுத்துத்திரண் தான் அவரை உலகின் பல மூலைகளுக்கும் கொண்டு சேர்த்திருக்கின்றது. ஹேட்பீல்ட் பற்றி மேலும் அறிந்துகொள்ள அவரின் விக்கிபீடியா பக்கத்தைப் பார்க்களாம்.

அவருடைய யூடியூப் தளத்தில் புத்தாண்டில் அனைவரும் தீர்மானம் எடுத்துக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக ஒரு காணொளியை அவர் பதிவேற்றியிருந்தார். அதை என் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டபோது இதை தமிழில் மொழி பெயர்த்தால் நன்றாக இருக்கும் என்று நண்பர் +abbas ali சொல்லியிருந்தார். அந்த காணொளியும் அதன் தமிழாக்கமும் கீழே. இந்த காணொளியில் சொல்லப்பட்டிருக்கும் செய்தி அடிப்படை வசதிகள் பற்றியது. ஆனாலும் தமிழ் நாட்டில் அணுமின், மீத்தேன் எதிர்ப்பு குரல்கள் பலமாக ஒலித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த செய்தி கொண்டு சேர்க்கும் கருத்து எல்லா பிரச்சினைகளுக்கும் பொருந்தும் என்றே நினைக்கின்றேன். 


தமிழில்: 
நாம் எல்லோரும் வெகு வேகமாய்ப் போய்க்கொண்டிருக்கின்றோம். பூமத்திய ரேகைக்கு மெலே நாம் நிற்கும்வேளையில், நமக்கு கீழே இந்த உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது. நாம் எல்லோருமே மணிக்கு சும்மார் 1000 மைல் வேகத்தில் ரொம்ப வேகமாய் போய்க்கொண்டிருக்கிறோம். ஒரு நாழிகை, நின்று பார்த்தால் என்ன? இங்கே, எல்லாவற்றிலும் பிரச்சினை இருக்கிறது. எதுவும் சரி இல்லை. ஆனால் இங்கு எதுவும் சரியில்லை என்பது வருந்தி புலம்புவதற்கு உன்டன் காரணம் இல்லை. எதுவும் சரியில்லை என்பது அதை சரிசெய்து சாதிப்பதற்கான காரணியாகும். நம் உலகம் நாம் பலநேரங்களில் கோருவதை விடவும் ஒரு நல்ல இடமாகத்தான் இருந்திருக்கின்றது. ஆரோக்யம், நல்வாழ்வு ஆகியவற்றைப் பொருத்தவரை நாம் இன்று சிறந்ததொரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எழுத்தறிவு என்பது பல ஆண்டுகளாக சீராய் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. 

படம்: உலக எழுத்தறிவு: 1950ல் 55% ; 2010ல் 81%

அதிகமான மக்கள் அதிக காலம் உயிர்வாழ்கின்றார்கள். குழந்தை பிறப்பின் போது ஏற்படும் தாய் மற்றும் சேய் இரப்புக்கள் பற்பல மடங்குகள் குறைந்துள்ளன. இதனால் பல மில்லியன் உயிர்கள் காப்பாற்றாப்பட்டுள்ளன.

படம்: 1950ல் 100க்கு 15 குழந்தைகள் பிறக்கும் போது இறந்திருக்கின்றன.

 படம்: 2010ல் 100க்கு 2 குழந்தைகள் மட்டுமே பிறக்கும் போது இறந்திருக்கின்றன.

பல கொடிய நோய்கள் முழுமையாக விரட்டப்பட்டுவிட்டதை பார்த்திருக்கின்றோம். 

படம்: 1980களில் பெரியம்மை முழுதுமாக ஒழுக்கப்பட்டது. 2011ல் ரைன்டர் பெஸ்ட் (கால்நடைகளுக்கு வரும் உயிர்கொள்ளி பிளேக் வகை நோய்) முழுதுமாக ஒழுக்கப்பட்டது.
மேலும் பல நோய்களை இல்லாமல் செய்யும் வேலைகள் சிறப்பாகவே நடந்துகொண்டிருக்கின்றன.

படம்: 2000ஆவது ஆண்டிலிருந்து 2009 வரை மலேரியாவால் இரந்தவர்கள் எண்ணிக்கை (வெள்ளை நிர சட்டங்கள்), மற்றும் அதே ஆண்டுகளில் மலேரியா நோய் தொடர்பான ஆய்வுகளுக்கான நிதியின் அளவு (நீல நிர கோடு). நிதியின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, இரப்புகள் குறைந்துள்ளன.

நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை என்பது சில மனிதர்கள் இந்த பிரச்சினைகளை, சிக்கல்களை சவால்களை சரி செய்வதற்காக போர்குணத்தோடு செய்த போராட்டத்தால் கிடைத்தது. சென்ற 100 ஆண்டுகளில் நாம் ரைட் சகோதரர்களை படமெடுத்தது முதல் 800 மில்லியன் (800,000,000) மைல்கள் தொலைவில் உள்ள சனி கிரகத்தின் நிலவுகளில் ஒன்றான டைட்டனில் ஒளிப்படக்கருவியொன்றை இறக்கியது வரை செய்து முடித்திருக்கின்றோம். இந்த உலகத்தில் மாற்றத்தைக்கொண்டுவருவதற்காக உழைக்கும் அமைப்புகளும், அறக்கட்டலைகளும் பெருகிய வண்ணம் இருக்கின்றன. இவை எல்லாம் இணைந்து ஏழை மக்கள் பசியிலிருந்தும் ஏழ்மையிலிருந்தும் அவர்களை விடுவித்துக்கொள்வதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றன. 

படம்: பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அரக்கட்டலை 2014 நவம்பர் வரை 42.3 பில்லியன் (42,300,000,000) டாலர்களை நன்கொடை செய்துள்ளது.

படம்: சுமார் 2.5 பில்லியன் (2,500,000,000) அடிப்படை வசதியற்ற மக்களுக்கு கழிப்பறை வசதி.

படம்: சுமார் 100 மில்லியன் (100,000,000) குழந்தைகளுக்கு நோய்தடுப்பூசிகள். ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 2.5 மில்லியன் குழந்தைகள் நோயிலிருந்து காக்கப்படுகின்றனர்.

இதையெல்லாம் நினைத்துப்பார்க்கும்போது இவ்வாண்டு நன்னம்பிக்கை கொடுக்கிறது. அதே சமயம், யாரும் இந்த உலகத்தை எந்த சிரத்தையும் இன்றி தாமாமவே மாற்றிவிடவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எல்லாமே ஒரு தீர்மானத்தில் தான் தொடங்குகிறது. புத்தாண்டில் உங்கள் தீர்மானம் என்ன?



ஒவ்வொரு மாற்றமும் ஒரு தனிமனிதனின் ஒரு தீர்மானத்தில் ஆரம்பிக்கிறது. தெருமுனைக் கூட்டங்களிலும், சுவரொட்டிகளிலும், பேஸ்புக், டிவிட்டர் தளங்களிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி பதிவு போட்டுவிட்டு நகரும் நாம் தனி மனிதனாக நாம் செய்யவேண்டிய பங்களிப்பைச் செய்கின்றோமா? 10 நிமிடம் நடக்கும் தூரத்திற்கு பெட்ரோலை எரித்து இரு சக்கர வாகனத்தில் போகின்றோம், மின் விசிரி போதிய இடத்தில் குளிர் சாதனம் பொருத்திக்கொள்கின்றோம், இரவு உரங்கச்செல்லும் முன் தொலைக்காட்சியை ரிமோட்டில் மட்டும் அனைத்துவிட்டு மின்னினைப்பை தூண்டிக்காமல் விட்டு விடுகின்றோம், அலுவலகக்காகிதமானால் இன்னும் இரண்டு பக்கம் சேர்த்து அச்சிடுகின்றோம். இதெல்லாம் சின்ன சின்ன விஷயங்கள் தான் ஆனால், எல்லோரும் எரிக்கும் ஒரு 10 நிமிட நடை தூரத்திற்கான பெட்ரோலும், குளிர் சாதனமும், அனைக்காமல் விட்ட தொலைக்காட்சியும் அனுமின் ஆலைகளின் கதவுகளை பெரிதாக திறக்கவும், மீத்தேன் வயல்களின் ஆழத்தையும் அகலத்தையும் அதிகரிக்கவுமே செய்யும். நாம் ஒவ்வொருவரும் தேவை இல்லாமல் அச்சிடும் ஒவ்வொரு தாளும் தேவைக்கதிகமாக வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் ஈடாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நம் தனிமனித நடத்தையிலிருந்தும், நம் ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் ஆரம்பிக்கப்படவேண்டியது. இந்த புத்தாண்டில் உங்கள் தீர்மானம் என்ன?

மாநிலப் பார்வை, தேசிய பார்வை - எது முதலில் வேண்டும்?

இடுகையிட்டது: ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012 by Unknown in லேபிள்கள்: ,
1


நேற்றைய பெரிதினும் பெரிது கேள் (11.02.2012) நிகழ்வின் தலைப்பு, "மாநில பார்வைக்குப்  பிறகு தேசிய பார்வையா , அல்லது தேசிய பார்வைக்குப் பிறகு மாநில பார்வையா - எது முதலில் வேன்டும். இதில் ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி மாணவிகளும், மகளிர் கிருஸ்தவ கல்லூரி மாணவிகளும் கலந்துகொண்டு வாதிட்டனர். இதில் தேசிய பார்வைக்குப் பிறகுதான் மாநில பார்வை என்று வாதிட்ட ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி மாணவிகள் வெற்றிபெற்றனர்.
இதில் முதல் சந்தோஷம், சென்னை கல்லூரி பெண்களின் தமிழ். இரண்டு பக்கமும் தடுமாறும் 'டமில்' பெரிதும் இல்லாமல் வாதிட்டது பெரிய மகிழ்ச்சி. அதுக்காக, ஆங்கில வாடை எல்லாம் குறைவா இருந்ததுன்னு சொல்ல முடியாது. ஆனா, தமிழ்நாடுத் தமிழை (தமிlish) குறைவில்லாம பெசினாங்க. நல்ல விடயம்.
ஆனா எனக்கு உறுத்தின விடயம், மாநில பார்வை பக்கம் பேசின மகளிர் கிருஸ்தவ கல்லூரி மாணவிகள் கிட்ட பெரிசா வாதங்களே இல்லாததுதான். கொஞ்சம் ஏமாற்றாமாவே இருந்ததுன்னு கூட சொல்லலாம். உணர்ச்சி வேகத்துல மேலோட்டமா பேசினாங்களே தவிர வலுவான வாதங்கள் இல்லை. தகவல்கள் இல்லை. எந்தெந்த விடயங்கள்ல தேசிய பார்வை பின்னடைவை ஏற்படுத்துன்னு தெளிவான சிந்தனைகளை எடுத்து வைக்க தவரிட்டாங்க. ஏதோ வாதங்களே இல்லாத தலைப்பை கொடுத்து வாதிட வெச்ச மாதிரி தெரிந்தது.
தேசிய பார்வை என்கிற வாதம் ரொம்பவே சுலபமானது. ஒரு தேசம் என்கிற போது அனைத்து மக்களையும் சற்றேழத்தாழ ஒரே கண்ணோடத்துடன் அனுகுவது சாத்தியமாகும். அவர்களை ஒருங்கிணைப்பதற்கு, ஒரு வரலாறு, ஒரு பன்பாடு, ஒரு கலாச்சாரம் என்று இருகும். ஆனால், இந்தியா என்பது பல வேறுபட்ட தேசிய இனங்களை கொண்டது. பல வேறுபட்ட வரலாற்றையும், பன்பாட்டு விழுமியங்களையும், கலாச்சாரத்தையும் அடிப்படையாகக் கொண்ட இனங்கள் வாழும் ஒன்றியம். அதன் காரணமாக ஒரு அல்லது ஒன்றுபட்ட தேசிய பார்வையில் ஏற்படும் சிக்கல்களையும் அலசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மொழி, இனம் என்கிற உணர்வடிப்படையான இடங்களைத்தாண்டி, மாநிலங்களுக்கான உரிமை, பொருளாதார சுதந்திரம், சமூக நீதி சார்ந்த மேம்பாடுகள் இப்படி எத்தனையோ விடயங்கள தொட்டு பேசியிருக்கலாம். விடுதலை பெற்று அறை நூற்றாண்டு ஆன பின்னும் அப்படியே இருக்கும் இந்திய அரசியலமைப்பு, ஐக்கிய அமேரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் நன்மை/தீமைகள் - இவற்றில் இருந்து இந்திய ஒன்றியம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன, போன்ற செய்திகளையும் கையாண்டிருக்கலாம். எந்த துறைகளில் தேசியப் பார்வைக்கு முதலிடம் கொடுக்க வேண்டும், எந்த துறைகளில் மாநில பார்வைகளுக்கு முதலிடம் கொடுக்கவேண்டும் என்ற கருத்தாக்கங்கள் வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
இவை எல்லாம் இருந்தாலும், இதுபோன்ற கணமான தலைப்புகளை எடுத்து, மாணவர்களை கையாளச்செய்ததற்கு விஜய் டீவியை பாராட்டியே ஆகவேண்டும். 'முன் ஜென்மம்', 'எல்லாவற்றுக்கும் ஆசைப்படு போன்ற மூலைக்கு விலங்டும் நிகழ்ச்சிகளை கொண்டிருந்தாலும், சிந்தனையை தூண்டும் கருத்தாழமிக்க இதுபோன்ற நிகழ்ச்சிகளையும் கொண்டிருப்பது வரவேற்கவேண்டிய ஒன்று. முழு நிகழ்ச்சிக்கான இணைப்பு கீழே:
http://www.tamilkey.com/perithinum-perithu-ke-11-02-12-vijay-tv.html

இந்த மனிதனை காப்பாறியிருக்கலாமோ...???

இடுகையிட்டது: வியாழன், 27 அக்டோபர், 2011 by Unknown in லேபிள்கள்: , ,
4

எப்போதும் போல தொலைபேசியில் கேட்டுக்கொண்டிருந்தேன் என் அம்மாவிடம், 'அப்பறம், வேர என்ன செய்தி அங்க லோக்கல்ல??', 'இங்க ஒன்னும் பெரிசா செய்தி இல்லடா தம்பி... ம்! சபாபதி (உண்மையான பெயர் தவிர்த்திருக்கிறேன்)  இறந்துட்டார். அதுதான் ஒரு செய்தி' என்றார்கள். என்ன ஆச்சு என்று கேட்டதற்கு, 'நேத்திக்கு நைட்டு தூக்கு போட்டுகிட்டார்டா' என்று கொஞ்சம் அலட்சியம் கலந்த தோணியில் சொன்னார்கள். 'தூக்கு போட்டுக்கிட்டாரா, என்னாச்சும்மா?' இவ்வளவு அலட்சியமாக சொல்கிறார்களே என்ற ஆச்சர்யம் வேறு எனக்கு. என் குரலில் இருந்த அதிர்ச்சியும் கணமும் அதற்குபின் அம்மாவின் குறலிலும் தொற்றிக்கொண்டது.
பிறகு எனக்கு விளக்கம்  கொடுத்துக்கொண்டிருந்தார்கள். 'என்ன, அவருக்கு சுத்தமா உடம்பு முடியல, நடக்க கூட முடியல; ஒரே குடி, குடி தான். குடிச்சு, குடிச்சே உடம்ப கெடுத்துக்கிட்டாரு; எந்த வேலைக்கும் போகமுடியல; நேத்து நைட்டு வீட்ல எல்லாம் துணி எடுக்க கடைக்கு போயிருக்காங்க. யாரும் இல்லாத நேரத்துலதான் இருக்கக்கூடாதுன்னு எதையோ யோசிச்சு தூக்கு போட்டுகிட்டாரு'.


பாபா (பேராசிரியர்) நரேந்திர நாயக் - குருக்களுக்கெல்லாம் பெரிய குரு

இடுகையிட்டது: சனி, 20 ஆகஸ்ட், 2011 by Unknown in லேபிள்கள்:
3

"எல்லா குருக்களுக்கும் குரு நான்" - இப்படித்தான் பேச ஆரம்பிக்கிறார் பேராசிரியர் நரேந்திர நாயக். “ஏன்னு கேக்றீங்ளா, ஒவ்வொர் குருவும் ஒவ்வொர் அதிச்யம் செய்வான், நான் பாபா நரேந்திரா, அவங்கோ எல்லார் செய்றதையும் நான் ஒர்தனே செய்வேன்" என்று கண்ணடம் கலந்த தமிழில் சொல்லி சிரிக்கிறார்.

என்னமோ ஏதோ...!

இடுகையிட்டது: சனி, 7 மே, 2011 by Unknown in லேபிள்கள்: ,
1

என்னமோ ஏதோ... என்னம் திரளுது கணவில்... வண்ணம் திரளுது நிணைவில்... கண்கள் இருளுது நனவில்......

மனது இன்னும் பாடிக்கொண்டே இருக்கிறது இந்த வரிகளை... படம் பார்த்து திரும்பி வந்து கிட்டத்தட்ட 7 மணி நேரம் ஆகப்போகிறது.  இன்னும் "கோ"-வின் சாரல் நின்றபாடில்லை!

நான் ஓகூஸ் நகரில் வாழ்கிறேன். ஹோர்ன்ஸ்லெட் நகரத்தில் உள்ள ஹோர்ன்ஸ்லெட் பியோ திரையரங்கம், கிட்டத்தட்ட 25 கீ.மி இங்கிருந்து.  "கோ" படத்தை அங்கு தான் திரையிட்டார்கள். டென்மார்க்கில் தமிழர்கள் மற்ற நாடுகளைவிட குறைவு என்பதால், எந்த படம் வந்தாலும் ஒரு நாள், ஒரே காட்சி தான். போனா-போனதுதான், விட்டா-விட்டதுதான். இன்று இந்த படத்தை பார்ப்பேன் என்று தெரிந்ததால் இணையத்தில் இருந்த "தியேட்டர் பிரிண்டை" பார்க்கவில்லை. ஒரு சில பாடல்கள் "அடச்சே... இந்த நேரத்துல பாட்டா...??" என்று எரிச்சலூட்டியது தவிர ஒரளவுக்கு படம் விருவிருப்பாகத்தான் போனது. 

திரைப்படங்களை விமர்சனம் செய்யும் அளவுக்கு எனக்கு திரை அறிவு போதாது. ஆனா படம் முடிந்தபிறகு ஒரு விஷயம் யோசிக்கத்தோணுச்சு. அரசியல்/அதிகாரம் இதுக்கு நல்லவர்கள்/இளைஞர்கள் வரனும் - இது ஒரு புதிய கரு அல்ல. இந்த கதைக்கருவை சுமந்து நம்ம திரைகள்ல நிரைய படங்கள் வந்திருக்கு. அரசியல் மற்றும் அதிகாரம் நல்லவங்க கைக்கு போச்சுன்னா எல்லாம் சரியாகிடும். ஊழல் இருக்காது, தப்பு நடக்காது, மக்கள் செழிப்பா இருப்பாங்க அப்படின்னு ஒரு தப்பான நம்பிக்கை நம்மகிட்ட இருக்கு. ஆனா என்னை பொருத்தவரையில், "ஜனநாயகம்" என்று சொல்லப்படுகிற "மக்களாட்சியில்" இது சாத்தியமே இல்லை. 

பெறும்பான்மை மக்கள் பேராசை பிடித்தவர்களாகவும், பொருப்பற்றவர்களாகவும் இருக்கும்போது அவர்களிலிருந்து வரும் தலைவன் மட்டும் எப்படி நல்லவனாக இருக்க முடியும். மக்களாட்சியை பொருத்தவரை, ஒரு திருடர் கூட்டம் இருக்குமென்றால், அதில் கைதேர்ந்த திருடன்தான்அந்த கூட்டத்துக்கு தலைவனாக முடியும். திருடுவது தவறு என்று சித்தாந்தம் உள்ளவனால் அங்கு வர முடியாது. அப்படியே வந்தாலும், அவனை அந்த கூட்டம் ஏற்றுக்கொள்ளாது. அவன் தலைவனாக தொடரவேண்டுமென்றால் அவன் திருடனாக மாறியே ஆகவேண்டும். அதே போல்தான் இங்கும். ஒருவேளை ஒரு நல்ல மனிதன் அல்லது நல்ல மனிதர்கள் ஆட்சிக்கு/அதிகாரத்துக்கு வந்தால், அவனால் அந்த மக்களை சோம்பேறியாக வைத்துக்கொள்ள முடியவில்லை என்றால், மக்களை திருத்துகிறேன் பேர்வழி என்று எதையாவத் செய்து வைத்தால், அடுத்தமுறை அந்த மனிதனால் ஆட்சிக்கு வரமுடியாது. இதுதான் இங்கு நிதர்சனம். 

மக்கள் வழியே மகேசன் வழி!

மக்களாட்சியில், மகேசன் வழிக்கு என்றுமே மக்களை கொண்டுவரமுடியாது. அதுவும் இந்த 5 ஆண்டு தேர்தல் முறையில் நிச்சயம் முடியாது. மக்களின் மனநிலையில், தனிமனித/பொது ஒழுக்கத்தில் மாற்றம் ஏற்படாமல் அரசியல் மாற்றமோ, ஆட்சி மாற்றமோ, போராட்டமோ எதுவுமே வெற்றி பெறாது என்பது என்னுடைய கருத்து. 

விடுதலை பெற்று 64 ஆண்டுகளை கடந்துவிட்டோம், ஆனால் என்ன செய்தோம்? வறுமையை ஒழித்தோமா, இன (சாதி) வெறியை ஒழித்தோமா, பெறும்பான்மை மக்களின் வாழ்வியலை உயர்த்தினோமா, இல்லை என்னதான் செய்தோம். மேற்கு நாடுகளுக்கு சாமரம் வீசி நம் மக்களை நியாய அநியாயங்கள் தெரியாத பேராசை பிடித்த,  இலவசங்களை எதிர்நோக்குகின்ற, ஓட்டுக்கு காசுவாங்கும் கூட்டங்களாக, பொறுப்பற்றவர்களாகத்தான் ஆக்கியிருக்கிறோம்.

சரி, அதற்காக எதுவுமே நடக்கவில்லை என்று பொத்தாம்பொதுவாக நான் சொல்லவில்லை.  நடந்தது எதுவுமே பத்தாது என்பதுதான் என் வாதம். மக்களாட்சி என்ற கட்டமைப்பில் ஓட்டு அரசியலை நம்பி எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்று தான் சொல்ல வருகிறேன். நமக்கு பக்கதிலேயே இருக்கும், நம்மைவிட மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு சீனா. அங்கே ஜனநாயகம் கிடையாது, கம்யுனிசம் தான். 1980களில் நம்மைவிட அதிக வருமை இருந்த நாடு. இரண்டு நாடுகளும் அதை ஒழிப்பதில் எவ்வளவு வெற்றி பெற்றனர் என்று கீழுள்ள காணொளியில் பாருங்கள். அதில் சிகப்புப்பந்து சீனா, நீலப்பந்து இந்தியா (நன்றி http://www.gapminder.org/).

அதற்காக நான் கம்யுனிசத்துக்கு வக்காலத்து வாங்கவும் இல்லை. எந்த கொள்கையாக இருந்தாலும் பெறும்பான்மை மக்களின் புரிந்துணர்வு இல்லாமல் அதை நடைமுறை படுத்த முடியாது என்பதுதான் என் கருத்து. மாற்றம் என்பது மக்களிடமிருந்து ஆரம்பிக்கவேண்டிய ஒன்று, சமுதாய மாற்றாமாக பிறக்கவேண்டிய ஒன்று. அது ஓட்டு அரசியலினால் சாத்தியம் இல்லை. ஒரு சில நல்ல மனிதர்கள் எப்படியாவது ஆட்சிக்கு வந்தால் எல்லாம் மாறும் என்பது திரைப்பட கதைக்கருவுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கு. "கெட்ட ராஜாவ அழிச்சுட்டு, நல்ல ராஜா ஆட்சிக்கு வந்தாராம்... அப்பறம் மக்களெள்ளாம் சந்தோஷமா வாழ்ந்தாங்களாம்..." என்று சிறு பிள்ளைக்கு கதைக்கு வேண்டுமானால் சொல்லலாம் நடைமுறையில் சாத்தியமில்லை. ஓட்டு போடும் மக்களுக்கு இந்த நல்ல மனிதர்கள் தேவைப்படமாட்டார்கள். 

ஒரு நல்ல உதாறனம், இன்றைய தி.மு.கழகமும் அதன் தற்போதைய நிலையும். சாதியை ஒழிக்க போராடிய சமூக சீர்திருத்த இயக்கம், தி.க-விலிருந்து திமுக அட்சி அதிகாரம் வேண்டி ஓட்டு அரசியலுக்கு வந்தது. இன்றைக்கு நிலை என்ன சாதியை ஒழிக்கப்புறப்பட்ட இந்த மனிதர்களுக்கு இன்று சாதி இல்லாமல் அரசியலே இல்லை.. எந்த அரசியல் கட்சியும் இன்று சாதி சாயம் பூசாமல் அரசியலில் நிற்க முடியாது, ஓட்டு வாங்க முடியாது. சாதிப் பெயர் சொல்வது அவமானம் என்ற ஒரு கருத்தோட்டம் பல ஆண்டுகள் பாடுபட்டு தமிழகத்தில் விதைக்கப்பட்டது. ஆனால் இன்று திரும்பவும் பெயருக்குப்பின்னால் சாதிப்பெயர் போட்டுக்கொண்டால் தவரில்லை என்ற கண்ணோட்டம் எட்டிப்பார்க்கிறது.

விடுதலை பெற்ற இந்தியாவில் தமிழகத்தில் பெரியாரை அமைச்சரவை அமைக்கச்சொல்லி ராஜாஜி கேட்டபோது பெரியார் சொன்னாராம், நான் மக்களை திட்டுபவன், சமுதாயத்தொண்டு என்ற பணியில் அவர்களுடைய வெறுப்பை சம்பாதிப்பவன் நான் ஓட்டு அரசியலுக்கு வந்தால், அம்மக்களை சந்தோஷப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுவேன், அதன் பின் எந்த சீர்திருத்தத்துக்கும் இடம் இருக்காது, வேண்டாம் என்று சொல்லி விலகிவந்தாராம் பெரியார். அவர் சொன்னது எத்தனை உண்மை என்று நினைத்துப்பார்க்கிறேன்.

என்னை பொறுத்தவரை, மாற்றம் என்பது தனி மனிதம் சார்ந்தது. அது பெறும்பான்மை மக்களுக்கு பரவும்போது சமூகமாற்றமாக அமையும். இந்த மாற்றம் செயலாக்கப்படும்போது அதை கொண்டு செலுத்துவோர் நல்ல தலைவர்களாக உருவெடுப்பர். நம் வீட்டுக்குப்பையை அடுத்த வீட்டு வெளியில் போடக்கூடாது என்று நினைப்பதே இன்றைய சூழ்நிலையில் பெரிய மாற்றம்தான். 

சிறு சிறு மாற்றங்களிலிருந்து தொடங்குவோம். ஒவ்வொருவரும் தொடங்குவோம்!

"கோ" படம் பாத்துட்டு வந்த தாக்கத்துல, விளையாட்டா ஒரு சின்ன பதிவு எழுதலாம் அப்படீன்னு ஆரம்பிச்சு அது கொஞ்சம் சீரியசா போய் முடிஞ்சுடுச்சு. இருந்தாலும் பரவாஇல்லை. அப்படியே மாற்றம் பற்றி உங்களுடைய கருத்தையும் சொல்லிட்டு போங்க :)

சயிண்டிபிக்கா புரூவ் பன்னுனது, அப்படின்னா என்ன?

இடுகையிட்டது: புதன், 5 ஜனவரி, 2011 by Unknown in லேபிள்கள்:
11

....சயிண்டிப்பிக்கா புரூவ் பன்னிருக்காங்க தெரியுமா!!
இப்பல்லாம், அடிக்கடி ஒரு விசயத்த உண்மைன்னு நம்ப வைக்க பயன்படுத்தும் வார்த்தைகள்தான் இவை. இன்னும் சொல்லப்போனா, பல வார இதழ்கள்ள வர துணுக்குகள்ள முக்காள்வாசி இந்த வகையச்சேர்ந்தவைதான். எதைஎடுத்தாலும், "ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்சுருக்காங்க", "ஆய்வுபூர்வமா நிரூபிச்சுருக்காங்க" அப்படிங்குற வாசகங்கள் அதிகமா இருக்கும். ஒரு படி மேல போய், "அமேரிக்க விஞ்ஞானிகள், ஜப்பான் விஞ்ஞானிகள்  கண்டுபிடித்திருக்கிறார்கள்" அப்படின்னு கூட போடறதுண்டு. இதுல என்னன்னா, நம்ப ஊரு விஞ்ஞானின்னா நம்பமாட்டோம்ல...! 

ஆனா, உண்மை என்னனா, இந்த துணுக்குகள்ள பாதிக்குப்பாதி அல்லது, அதுக்கு மேலயே உண்மையான செய்திகள தாங்கி வரதில்லை. இது ஒரு வருத்தப்படவேண்டிய, கவணிக்கவேண்டிய ஒரு விசயம். இந்த துணுக்குகள் மூலமா பொது அறிவை வளர்த்துக்கறதில பெரும்பாண்மையானவர்கள், அதிகம் படிக்காத வீட்டில் இருக்கும் பெண்கள். வேலைக்கு போகாமல் இணையம் போன்ற வசதிகள் இல்லாத நிலையில் இருக்கும் படித்த சில பெண்களின் நிலையும் இதுதான். பெண்களின் மூலை மழுங்கடிக்கப்படுவது நல்லதில்லை அப்படீங்கறது என்னோட வாதம். எதிர் வாதம் ஏதும் இருந்தா, தயவு சென்சு டாக்டர். ஷாலினிய படிங்க, புரியும். 

பத்திரிகைகளில் இருந்து வருகிற இந்தவகை உண்மையற்ற செய்திகள் ஒரு புறமிருக்க, இன்றைக்கு அறிவியலோடு சேர்த்து ஆண்மீகம் பேசும் காவி முகமூடிக்கூட்டத்தோட மந்திர வார்த்தைகளும் இதுதான். 'மெட்டா பிசிகல் கான்செப்ட்', 'காசுமிக் எனர்ஜி'... இதெல்லாம் இவங்க பயன்படுதுற சில டெக்கினிக்கல் டெர்மினாலஜிகள்! இத நாங்க சும்மா சொல்லல, 'சயண்டிபிக்கா புரூவ் ஆயிருக்கு' அப்படின்னு சொல்லி, படிச்ச இளைஞர்கல நல்லா மூலை சலவை செய்யராங்க. 

பெரும்பாலும் ஓரளவு படித்த மற்றும் சமூக பொருப்புள்ள இளைஞர்கள்,  எந்த ஒரு விசயத்த எடுத்தாலும் யோசிச்சு, புரிஞ்சு செயல்படனும்னு நினைக்கிற புத்திசாலிகளாவே இருக்காங்க. ஆனா, நம்ம சமூகத்தில ஒரு ஆரோக்கியமான அறிவியல் புரச்சூழல் இல்லாத காரணத்தால அவங்களோட இந்த புத்திசாலித்தனமே அவர்களோட பலவீனமாவும் போயுடுது. இந்த மாதிரி இளைஞர்களை ரொம்ப அழகா இந்த மார்டன் சாமியார்கள் தங்கள் பக்கம் இழுத்துக்கறாங்க. தியானம், யோகாசனம் மாதிரியான மூளை மற்றும் உடலுக்கான பயிர்ச்சிகள்தான் இந்த ஹைடெக் குருக்களோட தூண்டில். தியானமோ, யோகாசனமோ இவையெல்லாம்மனதையும், உடலையும் சீராக்குகிற பயிர்ச்சி அப்படீங்கற வட்டத்த தாண்டி மூடநம்பிக்கை அப்படீங்கற வலையத்துக்குள்ள போய் சிக்கிக்கும்போதுதான் பிரச்சினை. 

என்னோட சொந்த அனுபவத்திலேயே பல உதாரணங்கள நான் பாத்துருக்கேன், பாத்துட்டும் இருக்கேன். இந்தமாதிரி போகிறவர்கள் பெரும்பாலும் ஒரு மாயமான, கற்பணை உலகத்துல வாழ ஆரம்பிச்சுடறாங்க. அதுக்கப்பரம், 'மஞ்ச கண்ணாடி' மாட்டின கததான். எதப்பாத்தாலும் மஞ்சல்தான். கொஞ்ச நாள் முன்னாடி இப்படி ஒரு நண்பர்கிட்ட பேசிக்கிட்டிருந்தப்போ, அவர் சொன்னார், நம்ப உடம்ப சுத்தி ஒரு மெல்லிய கண்ணுக்கு தெரியாடத லேயர் இருக்கும் விடுதலை (நான் தான்),  அதுதான் நம்ம நிரைய ஆபத்துகள்லேந்து காப்பாத்தும். அதை ஆரோக்கியமா வெச்சிக்கவேண்டியது ரொம்ப முக்கியம். தியானத்தின் மூலமா இது முடியும்னாரு. என்ன பேசரீங்க நட்பு (பேர் சொல்ல விரும்பல :(), இதெப்படி சாத்தியம் யார் சொன்னா இத உங்களுக்குன்னு கேட்டேன். எங்க தியான வகுப்புல சொன்னாங்க, நீங்கதான் பயாலஜிஸ்ட் (உயிரியல் நிபுனன்) ஆச்சே, இத பத்தி உங்களுக்கு தெரியாதா அப்படின்னு கேட்டாரு. இல்ல நட்பு அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது அப்படின்னேன். அவரும் விடாம, நம்ம தோளுக்கு மேல ஒன்னுமே இல்லயா, நல்லா யோசிச்சு பாத்து சொல்லுங்க அப்படின்னாரு. எனக்கு தெரிஞ்சு, நம்ம தோள்ல பல கோடிகணக்கான பாக்டீரியாக்கள்தான் வாழ்ந்துகிட்டிருக்குன்னு சொன்னேன். உடனே, 'அதான், அதேதான்; அததான் நாங்க சொல்றோம்'. 'இல்ல நட்பு, அது வெற, தவிர அதுக்காக நீங்க எதுவும் செய்யவேண்டாம், அது மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா விலங்குகளுக்கும் உண்டு; அதுக்கும் நீங்க தியானம் செய்யரதுக்கும் சுத்தமா சம்பந்தமே கிடையாது; தியானம் உங்க மூளை சம்பந்தபட்ட விசயம்', இது நான். அவர் விடுவதாக இல்லை, 'இல்ல விடுதலை, இத "சயின்டிபிக்கா புரூவ் பன்னிருக்காங்க" நம்புங்க'!!!! சரி, சயின்டிபிக்கா புரூவிருக்காங்கன்னா, எந்த சயின்டிபிக் ஜேர்னல்ல (ஆய்வுக்குறிப்புகள், ஆய்வுக்கட்டுரைகள் பதிப்பிக்கப்படும் ஆய்விதழ்கள்) பப்லிஷ் பன்னிருக்காங்கன்னு கேட்டேன். 'புரியல விடுதலை' அப்படீன்னார். 

அதுதாங்க விசயம், 'அறிவியல் நிரூபனம்' அப்படீன்னா என்னனே தெரியாமலேயே இத சொல்லி திருஞ்சுகிட்டிருக்காங்க நம்ப ஆளுங்க. உலகத்துல எந்த மூலையில் ஒரு ஆய்வு நடந்தாலும், அதோட முடிவுகள சர்வதேச  ஆய்விதழ்கள்ள (Scientific journals) பதிப்பிக்கப்பட்ட பிறகுதான் அதை நிரூபனமாகக் கொள்ள முடியும். இந்த ஆய்விதழ்களுக்குன்னு பல ஆராய்ச்சியாளர்களைக்கொண்ட ஆசிரியர் குழு இருக்கும். அவங்களுக்கு சமர்ப்பிக்கப்படும் ஆய்வுக்குறிப்புகள், அல்லது கட்டுரைகள்ள சொல்லப்படிருக்குற அறிவியல் சோதனைகள், அந்த சோதனைகளுக்கு அந்த ஆராய்ச்சியாளர்கள் கையாண்ட முறைகள் இவைஎல்லாத்தையும் ஆசிரியர் குழு பரிசீலிக்கும். அந்த பரிசீலனையில் ஏற்படும் சந்தேகங்களை அந்த ஆய்வ மேற்கொண்ட ஆராய்ச்சியாலர்கள் சரியான முறையில் தெளிவு படுத்தினால்தான் அந்த ஆய்வுக்குறிப்போ, கட்டுரையோ ஆய்விதழ்கள்ள வெளியாகும். ஒரு ஆய்வை முழுமையா முடிக்க வருடக்கணக்காகும்னா, முடிச்ச ஆய்வ கட்டுரையா எழுதி, அத பரிசீலனைகளுக்குட்படுத்தி பதிப்பிக்கறதுக்கும் குறைந்தது 3 மாதத்துலேந்து 1 வருடம் வரை ஆகும். Nature, Science, PNAS, Cell...இவையெல்லாம் உலகின் இரு சில சிறந்த ஆய்விதழ்கள். இந்த மாதிரி நூத்துக்கணக்குல இருக்கு. வெவ்வேறு துறைகளுக்கு வெவ்வேறு ஆய்விதழ்கள் உண்டு. 

ஆக,  இதுக்கு பேருதான் 'சயின்டிபிக்கா புரூவ் பன்றது'. இனிமே யாராவது 'சயின்டிபிக்கா....ன்னு சொன்னாலே, எந்த ஜேர்னல்ல (Journal) அப்படீன்னு கேளுங்க... (ஆ)சாமியோ, காவியோ, சாயம் எல்லாம் வெளுத்துரும்! 

இதப்பத்தி என்ன நினைக்கிறீங்கன்னு கீழ 2 வரி சொல்லிட்டு போங்க!! _/\_

சட்டத்தை மதிக்காத காவல்துறையும், காப்பாத்த வந்த கருப்பு டி-சட்டைகளும்...!

இடுகையிட்டது: திங்கள், 18 அக்டோபர், 2010 by Unknown in லேபிள்கள்:
2

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு! இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு! இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு! இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு! இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு! இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு! இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு! இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு! இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு! இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு!

இந்தியா ஒரு மதசார்பற்ற நாடா??

இல்லை. நிச்சயமாக இல்லை. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு இல்லை என்பது தான் உண்மை - என்று சொன்னால், சணடைக்கு வருபர்கள் அதிகம். அவர்கள் பக்கம் சிறிது யோசிப்போம்; 1. இந்தியாவில், அனைத்து மத பண்டிகைகளுக்கும் அரசு விடுமுறை விடுகிறது. 2............................................................................................. வேறென்ன இருக்கிறது??? சரி, இதையும் சொல்வோம், இந்திய அரசின் சட்டங்கள் எல்லா மதத்தவருக்கும் ஒன்றே. அப்புரம், 3............. வேண்டுமென்றால் இதையும் சேர்த்துக்கொள்ளலாம், ராமன் பிறந்த இடம் (ராம ஜென்ம பூமி) / பாபர் மசூதி வழக்கில் இந்துக்களுக்கும், இசுலாமியர்களுக்கும் சரிசமமாக சட்டத்தை பிரித்துக்கொடுத்தது; இவை தவிர எனக்கு தெரிந்து வேறெதுவும் இல்லை.அதுதான், சட்டத்தில் இருக்கிறதே இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்று, போதாதா? போதுமா(??) என்பதுதான் இங்கு கேள்வி!

இந்தியாவில், ஜனநாயகம் என்று உலகத்தில் பலராலும் பரவலாக அறியப்படுகின்ற மக்களாட்சி முதற்கொண்டு, அனைத்து கொள்கைகளும் ஏட்டில் மட்டுமே எழுதிவைக்கப்பட்டிருக்கின்றன என்பதே இங்கு உண்மை, இந்த மதசார்பின்மை உட்பட. இங்கே ஒரு முக்கியமான ஒரு விளக்கம் தேவைபடுகிறது. மத சார்பின்மை என்பது, நம்ம அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் எல்லா மத சடங்குகளுக்கும் போய் கலந்து கொள்வது சிறப்பு செய்வது என்று பலபேர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். மதசார்பின்மை என்பது, எந்த மதத்தையும் சார்ந்து இல்லாமல் இருப்பது தான். ஆனால், மதசார்பின்மையை நல்ல மனம் கொண்ட பலர், எல்லா மதத்தையும் அரவனைத்துப்போவது என்று நினைத்துக்கொண்டிருப்பதுதான் பிரச்சினையே.

சரி, தலைப்புக்கு வருவோம். இப்போதான் சரவதி பூசை, ஆயுத பூசை எல்லாம் முடிஞ்சுது. பள்ளிகள்ள படிக்கிற பசங்க நோட்டு புத்தகத்தைஎல்லாம், பையிலேந்து எடுத்து, அம்மாப்பா, படிக்க சொல்லாம, சாமி மாடத்துல வெக்கசொல்ற சந்தோசமான நாள். ஆயுத பூஜைன்னா, அருவா, கத்தியில ஆரம்பிச்சு, மோட்டார் சைக்கில், காரு, பேருந்துன்னு எல்லாத்துலயும் மஞ்சலும் குங்குமமுமா வெச்சு கும்பிடுற நாள். இதெல்லாம் வீட்டிலே நடக்கற வரைக்கும் சரி! இது அரசு அலுவலகங்களுக்கு போறபோதுதான் சிக்கல் வருது. தனி மனிதனா, எந்த இறைவழிபாடோ, மதச்சடங்குகளையோ செய்யறதில எதுவும் தப்பில்லை. சட்டப்படியும் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனா, அரசு அலுவலகங்கள்ள இந்த வேலைய செய்யக்கூடாது அப்படீங்கறதுதான் சட்டம். அதுதான், சட்டத்தோட ஏட்டுபுத்தகத்துல இருக்குற சொரைக்காய்!

அப்படி, சட்டத்தோட ஏட்டுச்சொரைக்காயை காப்பாத்த இருக்குறதுதான் காவல்துறை அப்படிங்கற துறை. ஆனா, அங்கயே கொடும கூத்து கட்டி ஆடினா, யாரு கேக்கறது? அங்கதான் வந்தாங்க நம்ம கருப்பு டி-சட்டக்காரங்க! அதாங்க, கருப்பு டி-சட்டையில பெரியார் படமெல்லாம் போட்டுகிட்டு ஊருக்குள்ள சுத்திகிட்டிருகாங்களே அந்த பெரியார் தி.க - காரங்கதான். 

இந்தமாதிரி-இந்தமாதிரி சட்டப்படி இப்படி எல்லாம் பூசை, புணஸ்காரம் எல்லாம் அரசு அலுவலகங்கள்ள செய்யக்கூடாது, அதுனால இந்தமாதிரி-இந்தமாதிரி இந்த பூசை எல்லாம் சட்டச்சுறைக்காய காப்பத்தவேண்டிய காவல்துறையே செய்யக்கூடாது, செய்யாதீங்கன்னு கடிதம் மூலமா எழுதி கேட்டுக்கிட்டதை பொருட்பதுதாம ஐய்யமாரெல்லாம், கூப்பிட்டு, பூத்தோரணமெல்லாம் கட்டி, சாமிப்படமெல்லாத்தயும் தொடச்சு மாட்டி, டேசன்ல அடுக்கி வெச்சுருக்குற துப்பாக்கியெல்லாம் தொடச்சுவச்சு, சந்தனம் தடவி, குங்குப்பொட்டு  இட்டு, பொரியெல்லாம் செஞ்சு பூசை தொடங்க நேரம்பாத்துக்கிட்டிருந்த நேரமா பாத்து இந்த கருப்பு டி-சட்டகாரங்க கரடி மாதிரி வந்து எல்லாத்தயும் கவுத்துட்டாங்க; அதுதான் சேதி! கீழ புகைப்படமெல்லம் இருக்கு... பாருங்க! மேலதிகமா தெரியனும்னா, இங்க சொடுக்குங்க! வணக்க்க்ககககம்!













கொஞ்சம் அராஜகமாத்தான் இருக்குன்னாலும்,  அநாகரீகத்தவிட அராஜகம் மேல்னுதான் தோணுது!