நான், நீ, நாம்- இது பாக்டீரியா மொழி
இடுகையிட்டது: வியாழன், 14 அக்டோபர், 2010 by Unknown in லேபிள்கள்: அறிவியல்பாக்டீரியாக்கள் பேசிக்கொள்ள ஒரு மொழி உண்டு என்று சொன்னால், எத்தனை பேர் நம்புவார்கள்? ஆனால், உண்மையில் அவைகளுக்கென்று ஒரு தனி மொழி இருக்கிறது, இம்மொழியைக்கொண்டு பேசி கலந்தாலோசித்துவிட்டுத்தான் பல முக்கிய வேலைகளை செய்கின்றன என்று ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. பாக்டீரியாக்களின் அந்த சங்கேத மொழியை பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து அதில் சில வார்த்தைகளை மனிதர்களாகிய நாம் கற்றுக்கொண்டுள்ளோம். நம்பமுடியவில்லையா? ஆம், பாக்டீரியாக்கள் தங்களுக்குள் தொடர்புகொள்ள, சில வேதிப்பொருட்களை தயாரித்து அதன் சுற்றுப்புறத்துக்கு அனுப்புகிறது. அப்படி அனுப்பப்பட்ட வேதிப்பொருட்களை உணர்வதன் மூலம் யார் தம் சுற்றத்தார் என்பதை தெரிந்துகொள்கிறது. நுண்ணுயிரிகளின் இந்த திறனை ஆராய்ச்சியாளர்கள், 'குவாரம் சென்சிங்' (Quorum sensing) என்று சொல்கிறார்கள்.
ஒரு ஒரு-செல்உயிரிக்கு இந்த திறன் எதர்க்கு என்ற கேள்வி எழுகிறது, இல்லையா? ஆனால், இக்குணங்கள் பரினாம வளர்ச்சியில் தத்தம் இனத்தின் வளர்ச்சிக்காகவும், அனுகூலமற்ற புறச்சூழல்களிலிருந்து காப்பதர்க்காகவும், தீங்குவிளைவிக்கக்கூடிய மற்ற உயிரிகளிடமிருந்து பாதுகாக்கவும், அவற்றை எதிர்க்கவும் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டவையாகக் கருதப்படுகிறது.
'விப்ரியோ பிசுசரி' (vibrio fischeri) என்ற ஒரு கடல் வாழ் பாக்டீரியாவில் இந்த குவாரம் சென்சிங்கை முதன்முதலில் கண்டுபிடித்தவர் 'போணி பேசுலர்' (Bonnie Bassler). இந்த பாக்டீரியாக்கள், பகலில் மணலுக்கு அடியிலும், இரவில் கடல் மேல்பரப்பில் வந்து இரைதேடும், ஒரு வகை மெல்லுடலிகள் வகையைச்சார்ந்த உயிரினத்தின்உடலுக்குள் இருந்து கொண்டு, இரவில் ஒளிரக்கூடிய திறன் கொண்டது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த பாக்டீரியாக்கள், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை அடைந்தவுடந்தான் ஒளிர்வதர்க்கான புரதத்தை சுரக்கின்றன. அதற்குமுன் இதை செய்வதில்லை. தங்களின் எண்ணிக்கையை குவாரம் சென்சிங்கின் மூலமாகத்தான் அறிந்துகொள்கின்றன என்று பேசுலர் கண்டரிந்தார்.
பாக்டீரியாக்களின் இந்த வேதிச்சொற்களை 'ஆட்டோ இன்டியூசர்கள்' (Autoinducer) அல்லது சுருக்கமாக AI என்று சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, பாக்டீரியா எனும் 'தொகுதி'யை (phylum) தனியாகவும், விப்ரியோ (vibrio) என்ற 'பேரின'த்தை (genus) தனியாகவும், பிச்சரி (fischeri) என்ற 'இன'த்தை (species) தனியாகவும் பிரித்துப்பார்ப்பதற்காக, மூன்று வகை வேதி-வார்த்தைகளை இவை உபயோகிக்கின்றன. அதாவது, தன்னுடைய ஒரே இனத்தை 'நான்'(AI-1) என்றும், தம் பேரினத்தை தெரிந்துகொள்ள, 'நீ'(CAI-1) என்றும், மற்றும் மற்ற வகை பாக்டீரியாக்களை தெரிந்துகொள்ள 'நாம்' (AI-2) என்றும் வெவ்வேறு வேதிப்பொருட்களை இவை சுரக்கின்றன.
மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்களும், இந்த தொழிற்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. மனித உடலில் நுழைந்த உடன், சிறிய எண்ணிக்கைகளில் இருக்கும்போது, இவை எந்த தீங்கும் செய்யாமல், இனப்பெருக்கம் மட்டுமே செய்துகொண்டிருக்கும். மனித செல்லை தாக்குவதற்கு தேவையான அளவு நச்சு-புரதங்களைச் சுரக்க, போதிய அளவு தங்களின் சகாக்களின் எண்ணிக்கை பெருகிய பிறகு, எல்லோரும் சேர்ந்து ஒரே நேரத்தில் அந்த புரதங்களைச் சுரந்து நமக்கு நோய் விளைவிக்கின்றன. இந்த ஒரு செல் உயிரிகளிடம் இந்த அளவுக்கு ஒழுங்குகள் இருப்பது ஒரு புறம் அதிர்ச்சியாயும் இருக்கிறது. ஆனால், ஒரே ஒரு செல்லை மட்டும் கொண்ட இந்த உயிரிகளே இத்தனை அறிவுடன் செயல்பம்டுபோது, நம்மையெல்லாம் சொல்லவா வேண்டும்.
பாக்டீரியாக்கள் பேசும் அதே வார்த்தைகளைப்போல அமைப்பைக்கொண்ட வேறு வேதிப்பொருள்களை அராய்ச்சியாளர்கள் தயாரித்து, இந்த பாக்டீரியா இருக்கும் இடத்தில் சேர்த்து சோதித்துப் பார்த்தனர். இதனால், குழப்பமடைந்த பாக்டீரியாக்கள் தங்கள் சகாக்கள் எல்லாம் இல்லை என்று நினைத்து நோய் உண்டாக்காமலே இருந்ததை அவர்கள் கண்டறிந்துள்ளனர். வருங்காலத்தில் மருந்து எதிர்ப்புசக்திகொண்ட நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருப்பதால் (தொடர்புடைய பதிவு), இந்த தொழிற்நுட்பம் பாக்டீரியாக்களினால் ஏற்படும் நோயிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பயன்படும் என்று நம்பப்படுகிறது.
இந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய, நிகழ்த்திக்கொண்டிருக்கிற அறிஞர்களுக்கும், இன்னும் அறிவியலின் உச்சங்களை தேடும் பணியில் ஈடுபட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான ஆராச்சியாலர்கள், அவர்களின் மாணவர்கள் என்று அனைவருக்கும் நம் பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்வோம்!
பி.கு.: அட இது பரவாயில்லை, பாக்டீரியாக்கள் எழுந்து நின்று நடந்து செல்வதைக்கூட நம்ப படமா எடுத்து வெச்சுருக்கோம் தெரியுமா (இணைப்பு)??
ஒரு ஒரு-செல்உயிரிக்கு இந்த திறன் எதர்க்கு என்ற கேள்வி எழுகிறது, இல்லையா? ஆனால், இக்குணங்கள் பரினாம வளர்ச்சியில் தத்தம் இனத்தின் வளர்ச்சிக்காகவும், அனுகூலமற்ற புறச்சூழல்களிலிருந்து காப்பதர்க்காகவும், தீங்குவிளைவிக்கக்கூடிய மற்ற உயிரிகளிடமிருந்து பாதுகாக்கவும், அவற்றை எதிர்க்கவும் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டவையாகக் கருதப்படுகிறது.
பாக்டீரியாவை தன்னுள் கொண்ட மெல்லுடலி |
ஆட்டோ இன்டியூசர் |
மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்களும், இந்த தொழிற்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. மனித உடலில் நுழைந்த உடன், சிறிய எண்ணிக்கைகளில் இருக்கும்போது, இவை எந்த தீங்கும் செய்யாமல், இனப்பெருக்கம் மட்டுமே செய்துகொண்டிருக்கும். மனித செல்லை தாக்குவதற்கு தேவையான அளவு நச்சு-புரதங்களைச் சுரக்க, போதிய அளவு தங்களின் சகாக்களின் எண்ணிக்கை பெருகிய பிறகு, எல்லோரும் சேர்ந்து ஒரே நேரத்தில் அந்த புரதங்களைச் சுரந்து நமக்கு நோய் விளைவிக்கின்றன. இந்த ஒரு செல் உயிரிகளிடம் இந்த அளவுக்கு ஒழுங்குகள் இருப்பது ஒரு புறம் அதிர்ச்சியாயும் இருக்கிறது. ஆனால், ஒரே ஒரு செல்லை மட்டும் கொண்ட இந்த உயிரிகளே இத்தனை அறிவுடன் செயல்பம்டுபோது, நம்மையெல்லாம் சொல்லவா வேண்டும்.
பாக்டீரியாக்கள் பேசும் அதே வார்த்தைகளைப்போல அமைப்பைக்கொண்ட வேறு வேதிப்பொருள்களை அராய்ச்சியாளர்கள் தயாரித்து, இந்த பாக்டீரியா இருக்கும் இடத்தில் சேர்த்து சோதித்துப் பார்த்தனர். இதனால், குழப்பமடைந்த பாக்டீரியாக்கள் தங்கள் சகாக்கள் எல்லாம் இல்லை என்று நினைத்து நோய் உண்டாக்காமலே இருந்ததை அவர்கள் கண்டறிந்துள்ளனர். வருங்காலத்தில் மருந்து எதிர்ப்புசக்திகொண்ட நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருப்பதால் (தொடர்புடைய பதிவு), இந்த தொழிற்நுட்பம் பாக்டீரியாக்களினால் ஏற்படும் நோயிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பயன்படும் என்று நம்பப்படுகிறது.
இந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய, நிகழ்த்திக்கொண்டிருக்கிற அறிஞர்களுக்கும், இன்னும் அறிவியலின் உச்சங்களை தேடும் பணியில் ஈடுபட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான ஆராச்சியாலர்கள், அவர்களின் மாணவர்கள் என்று அனைவருக்கும் நம் பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்வோம்!
பி.கு.: அட இது பரவாயில்லை, பாக்டீரியாக்கள் எழுந்து நின்று நடந்து செல்வதைக்கூட நம்ப படமா எடுத்து வெச்சுருக்கோம் தெரியுமா (இணைப்பு)??
Amazingly informative post. Very useful article. Thanks for sharing dear.