என்.டி.எம்-1 (NDM-1) இதுதான் இன்று உலகம் முழுதும் செய்தி ஊடகங்களின் முதற்பக்கங்களை அலங்கரித்துக்கொண்டிருக்கும் பெயர். ஆங்கிலத்தில் New Delhi Metallo-1 என்பதன் சுருக்கம் தான் இந்த என்.டி.எம்-1. இது ஒரு புரதம். இந்த புரதத்தை தயாரிக்கக்கூடிய மரபணுவைக்கொண்ட பாக்டீரியாக்கள், நாம் பயன்படுத்தும் நுண்ணுயிர்கொல்லிகள் பலவற்றிலிருந்து அவற்றைக் காப்பாற்றும் ஆற்றல் கொண்டது, முக்கியமாக பீட்டா லாக்டம்கள் (beta lactum) என்ற வகையைச்சார்ந்த மருந்துகளை (எ.கா. பென்சிலீன்) செயலிழக்கச்செய்யும் தன்மையைக்கொண்டவை. இவ்வகை ஜீன்களை எம்.பி.எல் (MBL)அல்லது (Metallo Beta Lactamase) என்று அழைப்பார்கள். இந்த புதிய எம்.பி.எல் நாம் முன்னமே அறிந்திருக்கும் எம்.பி.எல் களை விட வேறுபட்டவையாக இருக்கின்றன. இதை சிலர் ‘சூப்பர் பக்’ (super bug), அதாவது மிகையான ஒரு உயிர் என்று அழைக்கின்றனர். இதற்கு மும் எம்.ஆர்.எஸ்.ஏ (MRSA – Methecilin Resistant Staphylococcus Aureus) என்ற பாக்டீரியாவை சூப்பர் பக் என்று அழைத்தனர். ஆனால், இந்த மரபணுக்கு அல்லது புரதத்துக்கு இந்த பெயர் ஏற்புடையதல்ல. இதனால் ஒரு பாக்டீரியாவை சூப்பர் பக்-காக ஆக்கமுடியல்லாம் ஆனால், இதுவே ஒரு சூப்பர் பக் அல்ல என்பது என் வாதம்.
மேலும், ஊடகங்கள் ‘கிட்டத்தட்ட அனைத்து (most)’ மருந்துகளையும் எதிர்க்கக்கூடியது என்று சொல்கிறார்கள். அந்த ‘கிட்டத்தட்ட அனைத்து’ என்பதன் விளக்கமென்ன? எவை எல்லாம் இதில் அடங்கும்? ஏனென்றால், இந்த என்.டி.எம்-1 ஐ முதலில் அறிமுகப்படுத்திய ஆய்வுக்கட்டுறை இவை புளூரோகியூனளோன்கள் மற்றும் கோளிஸ்டின் (fluoroquinolones and colistin) வகை மருந்துகளுக்கு கட்டுப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். என்.டி.எம்-1 வகை எம்.பி.எல் கள் முதன்முதலில் ஜப்பான் நாட்டில் 1991ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. இவை பெரும்பாலும் இண்டகிராண்கள் (integrons) என்று சொல்லக்கூடிய மரபணுக்களுடன் சேர்ந்து காணப்படுபவை. இண்டகிராண்கள் அதனுடன் இருக்கும் ஜீன்களை வேறு உயிரிக்கு தானாக எடுத்துச்செல்லும் குணம் கொண்டவை. இவை பாக்டீரியாக்களில் மருந்து எதிர்ப்பு சக்தியை பரப்புவதில் பெரும்பாலும் அறியப்படுபவை. நமக்கு முன்னமே தெரிந்த பழைய எம்.பி.எல் கள் எப்படி, எங்கே தோண்றின என்ற ஆராய்ச்சி இப்போது நமக்கு வேண்டாம், ஆனால் இந்த என்.டி.எம்-1 எனும் புதிய வகை எம்.பி.எல் இந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக, பிரித்தானிய அரசு தமது மக்களை இந்தியாவிற்கு மருத்துவத்திற்காக செல்ல வேண்டாம் என்று அறிவுறித்தியுள்ளது. மருத்துவ சுற்றுலா என்பது இந்தியா பொருத்தவரை, உலகில் மிகவும் பிரபலமான ஒன்று. இதனால் கிட்டத்தட்ட அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1200 கோடி ரூபாய்கள் வருமானம் வருகிறது. இந்திய அரசு, பிரித்தானிய அரசின் இத்தகைய செயலுக்கு கடும் அதிர்ப்தி தெரிவித்துள்ளது. இன்றைய தேதிக்கு, பல நூறு பாக்டீரியாக்கள் மற்றும் ஜீன்கள் மருந்தெரிப்பு கொண்டவைகளாக இருக்கின்றன. அவை வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு சூழல் மற்றும் மனித நடவடிக்கை காரணங்களால், இயற்கையால் உருவாக்கப்படுகின்றன. ஆனால், ஒவ்வொருமுறை இந்த பாக்டீரியாக்களோ, ஜீன்களோ கண்டுபிடிக்கப்பட்டபோது, இதுபோலவே அந்நாட்டிற்கு செல்லவேண்டாமென்று ஏதேனும் அரசுகள் நாட்டு மக்களை அறிவுறித்தியதா என்று கேட்டால், அப்படி ஒரு செய்தி இதுவரை இல்லை. ஏன், எம்.ஆர்.எஸ்.ஏ என்றழைக்கப்படும் பல மருந்தெதிர்ப்பு சக்தி வாய்ந்த பாக்டீரியா பிரித்தானியாவில் முதன்முதலில் 1961ல் கண்டுபிடிக்கப்பட்டபோது இப்படி ஒரு நிலை ஏற்பட்டதா? பின் 1981 ஆண்டு இதே வகை அமேரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. இன்று உலகம் முழுதும் இந்த வகை பாக்டீரியாக்கள் இருக்கின்றன. இதை பிரித்தானியாவில் உருவாகி பின் மற்ற நாடுகளுக்கு பரப்பப்பட்டது என்று சொன்னால் அதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
இதில் கவனிக்கவேண்டிய இன்னொரு சங்கடம், ஊடகங்கள். எப்போதும் போல இந்த செய்தியையும் ஊதி பெரிதாக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு செய்தி ஊடகம் ஒருபடி தாண்டிப்போய், “இதனால் அங்கங்கள் செயலிழந்து உயிரிழப்பு ஏற்படலாம்” என்று பிரச்சாரம் செய்கிறது. மக்களின் அறியாமையை பயன்படுத்தி இவர்கள் லாபம் பார்க்கிறார்கள். சமுதாயத்தில் செய்தி ஊடகள்களின் பணி அளப்பறியது, ஆனால் இன்று இந்தத்துறை சோரம்போய் விட்டது ஒரு கசப்பான உண்மை. கடைசியாக, இப்போது இந்திய அரசாங்கமும், ஊடகங்களும், என்.டி.எம்-1 ஐ கண்டுபிடித்தவர்களை தூற்றவும், பழிபோடவும் ஆரம்பித்திருக்கிறார்கள். இது தொடர்பாக முதன்முதலில் வெளியிடப்பட்ட ஆய்வுக்கட்டுரையைப் படிக்கும்போது, இதற்கு இந்தியாவை சம்பந்தப்படுத்திப் பெயர் வைத்திருப்பது ஒரு தவறாகத்தோண்றவில்லை. ஏனெனில், ஒரு புதிய ஜீனை கண்டுபிக்கும்போது, அதைக் கண்டெடுத்த இடத்தின் பெயரை சூட்டுவது வழமைதான். ஆனால், இது ஒரு திட்டமிட்ட சதி என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. மேலும், இந்த ஆராய்ச்சிக்கு பொருளுதவி செய்வது ஒரு மருந்து தாயாரிக்கும் நிறுவனம் என்பதால் அந்த நிறுவனத்தின் நலனுக்காக புணையப்பட்ட செய்தி இதுவென வாதாடுகிறார்கள்.
எது எப்படியோ, இப்போது செய்யவேண்டியதெல்லாம், இந்த வகை எதிர்ப்புசக்தி மற்ற பாக்டீரியாக்களுக்கு பரவாமல் தடுப்பதையும், அதற்கான மாற்று மருந்துகள் கண்டுபிடிக்கவும் வேண்டிய வழிமுறைகளை அறிவியல் பூர்வமாக ஆராய்வதே. அதை விட்டுவிட்டு, தொழிற்போட்டியோ அரசியலோ அறிவியலில் தலையிடுமானால், பாக்டீரியாவிற்கும் மனிதனுக்கும் நடக்கும் இந்த தொழிற்நுட்ப போரில் தோற்கப்போவது மனிதன் மட்டுமே.
very sad...India is the only country provides best medical treatment at less cost..and many foreiners are attracted to us due to the best treatment we provide..new viruses come and go..but the thing is to keep fighting but not attaching names to a country that provides its best.
+ve n -ve of the phones and a girl's life
http://www.indiblogger.in/indipost.php?post=34845