தங்க ஊசி சீமான்...! கண்கள் பொத்தும் பெரியார் தி.க...!
இடுகையிட்டது: வியாழன், 22 ஏப்ரல், 2010 by Unknown in லேபிள்கள்: ஆதங்கம்"தங்க ஊசி என்பதால் கண்களை குத்திக்கொள்ள முடியுமா?" - இலைமறை காய்மறையாய் நின்றிருந்த கருத்தியல் போர் இன்று களமேரிவிட்டது. வருத்தமாகவும்தான் உள்ளது. சீமானின் தமிழின எழுச்சிக்கான திராவிட எதி்ர்ப்பை கோடிட்டுக்காட்ட பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் பயன்படுத்திய மேற்கோள் இது (முழுதும் இங்கே).
பெரியாருக்குப்பின் மணியம்மை என்ற பெண்மையின் ஆளுமையை ஏற்கமுடியாது வளிந்து வெளியேறியது ஒரு கூட்டம். வழியில்லாமல் அங்கேயே தங்கியது இன்னொறு கூட்டம். இவர்கள் பெரியார் ஆக்கிவைத்த பகுத்தறிவாளர் என்ற பட்டம் துரந்து, பெண்ணடிமைச்சிந்தனையுடைய நாத்திக இன உணர்வாளர்களானார்கள். இதில் பலர் பின் நாத்திக சாயமும் வெளுத்து, இன உணர்வும் மழுங்கி புழுத்துவிட்டனர்.
பெரியார் உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தின் உள்ளேயே இருந்து கொண்டு, சுயமரியாதை உணர்வுடையவர்களை ஓட ஓட விரட்டிய கருப்புச்சட்டை கூட்டம் இன்னொன்று. ஓடி வந்ததில் பலர் சிதரிவிட்டபோதும், பெரியாரை முழுமையாய் உள்வாங்கிய சிலர் இன்றும் தெருவில் இரங்கி பெரியார் விட்டுச்சென்ற பணியை தொடர்கின்றனர் என்று நம்பியிருக்கையில், இப்போது அதில் இன்னுமொறு கூட்டம், பெரியாரே தப்பென்று வந்திருக்கின்றது. இதை என்னவென்று சொல்லத்தெரியவில்லை.
சீமான் - ஆவேசமான பேச்சு, ஓவென்று ஓங்கிமுழங்கும் குரல் வளம், கேட்பவரை சுண்டி இழுக்கும் மொழியியல், அரங்கம் எதுவானாலும் ஆர்பரிக்கும் ஆளுமை - சந்தேகமொன்றும் இல்லை இது தமிழுக்கு ஒரு தங்கம் தான். "என்னை சாதியெனும் சகதியில் இருந்து பிடுங்கிய அய்யா பெரியார்......" ஒரு காலத்தில் பெரியாரியலை முழுமையாய் ஏற்றுக்கொண்ட இந்த மனிதனின் உறைகளை தொடங்கி வைத்த பெருமைக்குறிய வார்த்தைகள் இவை! "இல்லாத திராவிட இனத்திற்கு ஆயிரம் கட்சிகள், இருக்கும் தமிழினத்திற்கு ஒரு கட்சி இல்லை...." இதுதான் இன்றைய இந்த 'நாம் தமிழரி'ன் அடித்தளம். திராவிட அரிதாரிகள்மேல கோபம் கொண்ட இவ்வரிகள் தன்னை வளர்தெடுத்த பெரியாரியலின் மென்னியையே அழுத்தப்பார்க்கிறது என்பது தான் உண்மை. இது நிதானமின்மையோ என்றும் கூட தோண்றுகிறது.
தமிழன் என்ற சொல்லாடலை சற்று ஆராய்வோம். தமிழன் என்ற அடையாளம் தமிழ் மொழி பேசுவதால் வந்தது என்று கொள்வோம். மொழிஆய்வாளர்கள் இந்திய துணைகண்டத்தில் மொத்தம் நான்கு மொழிக்குடும்பங்களை முன்மொழிகின்றனர். இந்த நான்கிலும் ஆசிய மற்றும் ஐரோப்பிய கலப்பிள்ளாத ஒரு மொழிக்குடும்பம், திராவிட மொழிக்குடும்பமாகவே இருக்கிறது (Indo-European, Dravidian, Austro-Asiatic and Tibeto-Burman ). இந்த தனித்தன்மை வாய்ந்த மொழிக்குடும்பத்தின் முதல் மொழியாக தமிழ் இருக்கிறது. இந்த கருத்தியலுக்கு மரபனு சார்ந்த ஆராய்ச்சிகளும் வளிமை சேர்க்கின்றன (1,2,3). ஆக, 'இல்லாத திராவிடம்' என்ற சொல்லாடல் அறிவியலுக்கு அப்பார்பட்ட உணர்ச்சியியலாக மட்டுமே பார்க்கப்படவேண்டியிருக்கிறது. பகுத்தறிவோர்க்கு இது புரியும். ஆரிய அடக்குமுறையினின்று விடுபடாமலும், சாதிய சாக்கடைகளை தூர்வாரதவரைக்கும், தமிழன் என்று மட்டும் பச்சைக்குத்திக்கொள்வதில் எந்த பயனும் இருக்கப்போவதில்லை.
நம் வருத்தம் ஒன்றுதான், இன்றைக்கு விளம்பரங்கள் ஒன்றுமில்லாமல் வீதிவீதியாய் சாதி ஒழிப்புக்கும், சமூக முன்னேற்றத்திற்கும் உழைத்துக்கொண்டிருக்கும் ஒரு திராவிடர் முத்திரையிட்ட பகுத்தறிவாளர் கூட்டத்தை, இந்த தமிழ் உணர்ச்சிப்பிழம்பு சுட்டுக்கொண்டிருக்கிறதே என்பதுதான். திராவிடமா, தமிழினமா என்ற கேள்விகளுக்கு பெரியார். தி.க தொடர்ந்தும் வெளியிடும் விளக்கங்கள் போதும், நாம் ஒன்றும் புதிதாக சொல்லத்தேவையிருக்கப்போவதில்லை. சீமான் சிறிது உணர்ச்சிவசப்படாமல் சிந்தித்தால் தமிழர்களுக்கு கண்கள் தப்பும். இல்லையேல், கண்களை காப்பதற்காக தங்க ஊசியானாலும் தூர வைக்கவேண்டிய கட்டாயத்திற்கு உணர்வாளர்கள் தள்ளப்படுவார்கள். திராவிடமோ, தமிழினமோ பெயர் வேறென்றாலும் இரண்டும் இணைந்து செயல்படாவிட்டால், இது ஓனாயை மறந்து ஆடுகள் முட்டிக்கொண்ட கதையில் போய் முடிந்துவிடும் என்றுதான் தோண்றுகிறது.
திராவிடம் - திராவிடன் என்பது வடமொழிச் சொல். இப்போது தமிழ்,மலையாளம், தெலுங்கு, கன்னடம் முதலிய மொழிகளையும் வேறு பல மொழிகளையும் குறிக்கப் பயன்படுவது. பெரியார் ஏன் இந்த பெயர் வைத்திருப்பார் என்று யூகிக்க முடிகிறது. அவர் கன்னடர். தமிழ் மொழியை வணங்குபவர்களை மூடர்கள் என்றும் கூறிய பகுத்தறிவாளர். இன்று தமிழனுக்கு எதிராக நிற்பவன் யார்? பஞ்சாபி சிங்கா? ராஜஸ்தானி மார்வாடியா? அல்லது திராவிடர்களான மலையாளிகளும் கன்னடர்களுமா? சீமான் சொல்வது சரியே. எல்லா சாயமும் ஒரு நாள் வெளுக்கும். திராவிடச் சாயம் உட்பட.