செயற்கை உயிர், அறிவியல் தொழிற்நுட்பத்தில் ஒரு மைல்கல்

இடுகையிட்டது: சனி, 22 மே, 2010 by Unknown in லேபிள்கள்:
6

அமேரிக்காவை சேர்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் இணைந்து செயற்கையாக தயாரிக்கப்பட்ட மரபணுவைக்கொண்டு (DNA) முதன்முதலில் ஒரு உயிரியை உண்டாக்கி இயங்கவைத்திருக்கிறார்கள்.  கணினி மென்பொருளின் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட மரபணுவை வேதிப்பொருட்களின் உதவியுடன் ஆய்வகத்தில் தயாரித்து, 'மைக்கோபிலாசுமா மைக்கோய்டீசு' என்ற பாக்டீரியாவை முழுமையாக இயங்கவும், உயிர்வாழவும் மற்றும் இனப்பெருக்கம் செய்யவைத்து வெற்றியடைந்துள்ளனர். இதுவரை, சிறு சிறு ஜீன்களை பாக்டீரியாக்களில் செலுத்தி தேவையான புரதங்களை தயாரித்துக்கொண்டிருந்தோம். இப்போது, முழுமையாக ஒரு பாக்டீரியாவை செயற்கையான முறையில் உயிர் வாழ மற்றும் இனப்பெருக்கம் செய்யத் தேவையான ஜீன்களை வரிசைப்படுத்தி அதை தயாரித்து அதற்கேற்றார்போல இயங்கவும் வைத்திருக்கிறோம்.  இதன்மூலம், எரிபொருள், மருந்துகள், கழிவுகளை அகற்றும் பணிகள், காற்றை சுத்தப்படுத்துதல், கரியமிலவாயுவை அகற்றுதல்  போன்ற பல வேலைகளை செய்யும் செயற்கை உயிரிகளை நம்மால் உருவாக்க முடியும்.

இந்த சாதனையின் மூலம் பல நன்மைகள் இருந்தாலும், இரண்டுபக்கமும் கூர்மையான கத்தியைப்போன்று அபாயகரமானதும் கூட. இதை ஆயுதங்களாகவும், அழிவு வேலைகள் செய்யக்கூடிய உயிரினங்களாகவும் பயன்படுத்த முடியும். அப்படி ஏதேனும் நடந்தால் அது மனித இனத்தின் அழிவின் ஆரம்பமாக முடிந்துவிடும். மனித இனத்தின் மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படும்வரை இந்த வெற்றி மதிப்புடையதாய் இடுக்கும். 

'சயின்ஸ்' (Science) என்ற உலகப்புகழ்பெற்ற ஒரு ஆய்விதழில் இந்த பணியை பதிவுசெய்துள்ளனர் (http://www.sciencemag.org/cgi/content/abstract/science.1190719) இதை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள். அறிவியலின் அலவுகோள்களை மாற்றியமைத்த இந்த மனிதர்களுக்கு எம் மானசீக வணக்கங்கள்.

6 கருத்துகள்:

  1. நண்பரே,

    இதே தலைப்பிலான என்னுடைய வலைப்பதிவு: http://thabaal.blogspot.com/2010/05/blog-post_22.html

    டி.என்.ஏ.விற்கு தமிழ் தெரியாமலிருந்தது. உங்கள் பதிவைப் பார்த்த பின்னர் மரபணு என்று மாற்றி விட்டேன். நன்றி.

  1. Arasu says:

    சிறப்பான அறிவியல் செய்தியைச் சுடச்சுட தந்திருக்கிறீர்கள்.தொடர்ந்து இதுபோன்ற செய்திகளை தெரியப்படுத்துங்கள்.

    இது முற்றிலும் புதிய உயிரினம் எனச்சொல்லமுடியுமா எனத்தெரியவில்லை. ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்ட மரபணுத்தொடரை மற்றொரு உயிரினத்தில் (Mycoplasma Capricolum) செலுத்தி உருவாக்கப்பட்டதே இந்தப் புதிய உயிரினம் (Mycoplasma Mycoides). எனினும் இதன் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடுவதற்கில்லை. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நுண்ணியிர் அறிவியலில் பட்டமேற்படிப்பு முடித்த ராதா கிருஷ்ணகுமார் இந்தக் கண்டுபிடிப்பில் பங்குபெற்றிருக்கிறார்.

  1. வருகைக்கு நன்றி ஏவிஎஸ். உங்களின் பதிவை படித்தேன். விரிவாகவும், முழுமையான் விவரங்களுடனும் சிறப்பாக எழுதி உள்ளீர்கள். இப்பதிவுக்கு வருபவர்கள் கட்டாயம் ஏவிஎஸ் அவர்களின் பதிவை படிக்கவேண்டும்.

  1. @ Arasu: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இது ஒரு புதிய உயிரினம் அல்ல. ஆனால் ஒரு உயிரின் வாழ்க்கைச்சக்கரத்தை முழுமையாக்கக்கூடிய மரபணுத்தொடரை வடிவமைத்து இயக்கியிருப்புது புதிய உயிரினத்தையும் உருவாக்கக்கூடிய சாத்தியங்களை அதிகமாக்கியிருக்கிறது என்றுதான் தோண்றுகிறது. உதாரணத்திர்க்கு, இன்று நம்மால் லைப்போசோம்களை (liposomes) ஆய்வகத்தில் உருவாக்க முடிகிறது. இந்த லைப்போசோம்களில் ஒரு மரபணுத்தொடரை செலுத்தி அதை முழுமையாக டிரான்சுகிருப்சன் (transcription) மற்றும் டிரான்சுலேசன் (translation) செய்யமுடிந்தால் புதிய உயிரி தயார். இது பாக்டீரியாவை விட சிறிய, அடிப்படை (primitive) உயிரியாகக்கூட இருக்களாம். ஒரு வரியில் சொன்னாலும் நடைமுறைச்சிக்கல்கள் நிறையவே இருக்கிறது. அனாலும் அது வெகு தூரத்தில் இல்லை என்றே தோண்றுகிறது.

    //திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நுண்ணியிர் அறிவியலில் பட்டமேற்படிப்பு முடித்த ராதா கிருஷ்ணகுமார் இந்தக் கண்டுபிடிப்பில் பங்குபெற்றிருக்கிறார்.//

    புதிய செய்தி. பகிற்வுக்கு நன்றி!

  1. VANJOOR says:

    இத்தனை அறிவை மனிதனுக்கு கொடுத்திருக்கிறானே ஆண்டவன் என்று ஆச்சர்யபட வைக்கிறது.

    VANJOOR.

  1. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நுண்ணியிர் அறிவியலில் பட்டமேற்படிப்பு முடித்த ராதா கிருஷ்ணகுமார் அவர்களுக்கு நம் பாராட்டுகள்