சாதி - தீண்டாமை ஒழிப்பு, ஊரெல்லாம் வரவேற்பு

இடுகையிட்டது: வியாழன், 27 மே, 2010 by Viduthalai R Regina in லேபிள்கள்:
0

ஏப்ரல் 14 முதல் மே 10-ம் நாள் வரை பெரியார் திராவிடர்கழக தோழர்கள் நடத்திய 'சாதி-தீண்டாமை ஒழிப்பு பரப்புரைப் பயணம்' பற்றிய தொகுப்பு ஒன்றை கழகத்தின் இணைய பக்கத்தில் படிக்க நேர்ந்தது (இணைப்பு கீழே). ஒவ்வொரு ஊரிலும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, நன்கொடைகள், விருந்து, தேனீர் விருந்தோம்பல் என்று அனைத்தையும் பதிவு செய்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சித்தொண்டர்களும், தலைவர்களும், பொதுமக்களும் இணைந்து இந்த பரப்புரைப்பயணத்திற்கு ஆதரவு அளித்துள்ளது வரவேற்கத்தக்கது.

பல நேரங்களில், பெரும்பான்மையான மக்கள், சாதி ஒழிப்புக்கும் சமுதாய முன்னேற்றத்திற்கும் தயாராகவே இருக்கிறார்கள். இது இந்த பயணத்தொகுப்பை படிக்கும்போது கண்கூடாக தெரிகிறது. ஆனால், இதை முன்னின்று இயக்கவோ, தலைமையேற்கவோ பல காரணங்களுக்காக இம்மக்கள் முன்வருவதில்லை. அந்த வெற்றிடத்தை பெரியார் திராவிடர்கழகம் சிறப்பாக நிரப்பி வருகிறது. இதை இடைநிறுத்திடாது, தொடர்ந்து செய்ய இவர்களுக்கு, சாதி-தீண்டாமை கொடுமைகள் ஒழிய வேண்டும் நல்லுள்ளங்களின் சார்ப்பில், நம் பாராட்டுகளும், நன்றிகளும்.
med henvisning til:
"சாதி - தீண்டாமை ஒழிப்புப் பரப்புரைப் பயணச் செய்திகளின் தொகுப்பு."
- Periyar Dravidar Kazhagam | பெரியார் திராவிடர் கழகம் (vis på Google Sidewiki)

0 கருத்துகள்: