புவி நாள்! - அதுக்கென்ன இப்போ???
இடுகையிட்டது: வியாழன், 22 ஏப்ரல், 2010 by Unknown in லேபிள்கள்: ஆதங்கம்ஏப்ரல் 22, புவி நாள். சரி! அதுக்கென்ன இப்போ, யாரோ ஒரு அமேரிக்க அரசியல்வாதி, சும்மாருக்க முடியாம 1970துல ஆரம்பிச்சது. இப்போ நமக்கு அதுவா முக்கியம். நாமல்லாம் கவலபட எவ்ளோ விசியம் இருக்கு, அத உட்டுட்டு, புவிநாள், புவியாத நாளுன்னுகிட்டு..................!!@#^\!!
சென்னை சூப்பர் கிங்சு இன்னிக்கு அரைஇருதிக்கு போகுதுப்பா, இங்க வேலையே ஓடமாட்டேங்குது. என்னாகுமோன்னு இருக்கு. IPL எவ்ளோ விசியம் இருக்கு தெரியுமா, மோடியோட ராஜிநாமா, அலுவலகங்கள்ள சோதனை, சில பல ஆவணங்கள் கூட சிக்கிருக்குங்கறாங்க... இதுக்கு நடுவுல, நித்திய கைது பன்னிட்டாங்களாம். ரஞ்சிதாவயும் தேடுறாங்களாம்ல?? அந்த பொண்னு ரொம்ப கவலையா இருக்குன்னு வேற இன்னிக்கு செய்தி போட்டுருக்காங்க. நித்திக்கு ஆண்மை பரிசோதனையெல்லாம் பன்னுராங்களாம்.. செய்தி வந்தவன்னமாவே இருக்கு... சுரா பத்திவேற அங்கங்க சேதி வந்துட்டு இருக்கு. இந்த விஜய் தம்பி என்ன பன்னப்போகுதுன்னு தெரியல. இந்த படத்துலயாவது தேருமான்னு பாக்கணும்... லதா ரஜினிகாந்துக்கு உடம்புக்கு சரி இல்லையாம், ஆசுபத்திரியில இருக்காங்கப்பா!!! இதுக்கெல்லாம் மத்தியில இப்ப புவிநாளுதான் ஒரு கேடா??
ரஞ்சிதா கிடைச்சிட்டாங்களா? ஹி.. ஹி.. ஹி..