டென்மார்க்கில் பிள்ளையார் கோயில் திருவிழா!!

இடுகையிட்டது: சனி, 29 ஆகஸ்ட், 2009 by Unknown in லேபிள்கள்:
1

டென்மார்க்கில் ஈழத்தமிழர்களால் கட்டப்பட்டு, இன்றுவரை தொடர்ந்து பாராமரித்து வரப்படுகிறது இந்த பிள்ளையார் கோயில். கடந்த 22ம் தேதி இக்கோயிலில் திருவிழா. பெரும் திரளாக மக்கள் வந்து கலந்துகொண்டனர். அலுவல் காரணமாக என்னால் அவ்விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால், இங்கு வாழும் இந்தியர்கள் பலர் பேருந்து ஒன்று ஏற்பாடு செய்து, கோயிலுக்கு போய் விழாவில் கலந்து கொண்டனர். வெளிநாட்டில் கோயில் கட்டி விழா எடுத்தால் எப்படி இருக்கும், அதுவும் பல ஆண்டுகளாக இங்கே குடியேரிவிட்ட மக்கள் ஒருங்கினைத்து செய்யும் திருவிழா, பகட்டுதான் அதிகமாயிருக்கும் என்று தோண்றியது. ஆனால் அவ்விழாவில் கலந்துகொண்ட என் தோழி ஒருவர் சொன்ன செய்திகள் என் புரிதல் தவரானது என்று உணரவைத்தது. மற்றும் அவ்விழாவின் புகைப்படங்களை பார்த்தபின் இதை அனைவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோண்றியது.
இந்த புகைப்படங்களை பாருங்கள், இது ஐரோப்பியாவில நடக்கும் ஒரு விழாவாக உங்களுக்கு தெரிகிறதா? இந்த பெருங்கூட்டத்தில், மேற்கத்திய உடை உடுத்தியிருக்கும் ஒருவரை கண்டுபிடியுங்களேன் (ஆண்களை விடுங்கள், அவர்களைபற்றி வேறொருமுறை பதிவு செய்கிறேன்)!! (படங்கள்www.indiansindenmark.com)









1 கருத்துகள்:

  1. DHANS says:

    are you in denmark? where exactly in denmark???