Windows XP தமிழில்

இடுகையிட்டது: வியாழன், 9 ஏப்ரல், 2009 by Viduthalai R Regina in லேபிள்கள்:
13


Windows XP இப்போது முழுதும் தமிழில் ஒளிர்கிறது. உங்கள் XP போலியில்லாததாயிருந்தால், Windos xp தமிழ் இடைமுக தயாரிப்பை தகவலிரக்கம் செய்து இயக்கினால், உங்கள் கணினி உங்களிடம் அழகு தமிழ் பேசும்.
அதுமட்டுமல்லாது, office 2003, office 2007 ஆகிய மென்பொருள்கலும் தமிழில் பயன்படுத்தலாம் (http://www.microsoft.com/downloads/Browse.aspx?displaylang=ta&categoryid=9).
தமிழ் மென்பொருட்களை பயன்படுத்தும் முன்னர் புரிந்து கொள்வதற்காக மென்பொருட்கள் பயன்படுத்தும் பாடங்களும் கிடைக்கின்றன.
மற்றும் பல இணையசேவைகளுக்கும் தமிழ் இடைமுகங்கள் கிடைக்கின்றன.
(http://www.microsoft.com/downloads/Browse.aspx?displaylang=ta&categoryid=6).

எங்கும், எதிலும் தமிழ் கொண்டாடுவோம்.

13 கருத்துகள்:

 1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டொக்டர்.

 1. கணினி வாங்கியவுடன் "விண்டோஸ் எக்ஸ் பி" இன்ஸ்டால் பண்ண ஒருவரை அணுகினேன். "எனக்கு ஒரிஜினல் வாங்கி இன்ஸ்டால் பண்ணனும்" என்று என் உள்ள கிடங்கை சொன்னதுதான் தாமதம் .........அந்தாளு ஒரு மாதிரியா பார்த்து கடுப்பா ஏதோ சொல்ல எத்தனிப்பதற்குள் "சரி சரி " டூப்ளிகேட்டே பண்ணிடலாம்னு சொன்னது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்பதான் தெரியுது!

 1. erbalaji says:

  எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது இப்பதிவு...

 1. கண்டிப்பா வெங்கடேசன், "போலியில்லாமலிருக்கனும்"...

 1. உண்மைதான் ஜுர்கேன், நானும் முதலில் போலி xp தான் வைத்திருந்தேன். பின் தமிழில் ubuntu (linux) உபயோகித்தேன். ஆனால் இப்போது xp-யே தமிழில் வருவதால், இதை Genuine ஆக்கிவிட்டேன்.

 1. தொழில் நுட்ப வளர்ச்சியில் இனி தமிழின் வளர்ச்சி முக்கியத்துவம் பெறும்.

 1. புதுத் தகவல்.... தமிழ் புதுமை பெறட்டும்.....

 1. அக்பர், சப்ராஸ் அபூ பக்கர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

 1. தோழர் நளன், சாளரம் எக்ச். பி.குறித்தத்தகவல் சிறப்பானது.
  தமிழ் மீது ஆர்வம் பிள்ளையார் கோ வில் காட்டவேண்டும் என்று சொல்கிறதா? மதமும்,புராணமும் தூக்கி
  நிருத்தும் கதைகளை எதிர்க்காவிட்டாலும் பாரமில்லை மேலும்
  மேலும் இது “மூலையில் போட்ட விளங்கு” எனத்தெரிந்தும் புதுப்பிப்பதால்
  காதொடிந்த ஊசியளவுகூடப் பயன்படாது என எப்போதுதான் உணரப்போகிறீர்களோ தெரியவில்லை.

 1. @ இறைகற்பனைஇலான்,
  பகுத்தறிவுக்கும், நாத்திகத்திர்க்கும் வேறுபாடு தெரியாத கருப்புச்சட்டைக்கரர்களில் நீங்களூம் ஒருவர் என்று நினைக்கும்போது என்னால் வருத்தப்பட மட்டுமே முடிகிறது. நாத்திகமும் ஒரு "மூளையில் போட்ட விளங்கு" தான்; பகுத்தறிவு பேசியதாலேயே பெரியார் வைக்கம் போனார், நாத்திகம் பேசுவதாலேயே உங்களால் பிள்ளையார் கோயில் படங்களைக்கூட ஏற்க முடியவில்லை!!! :(