தங்களை பகுத்தறிவுவாதிகளென்று சொல்லிக்கொள்பவர்களுக்கு...!!!

இடுகையிட்டது: சனி, 7 பிப்ரவரி, 2009 by Viduthalai R Regina in லேபிள்கள்:
0

பழ. நெடுமாறன், விடுதலை இராசேந்திரன், குலத்தூர் மணி, மணியரசன், கோவை. கிருட்டிணமூர்த்தி, வீரமணி மற்றும் சுப. வீரபாண்டியன் அவர்களுக்கு.

திரு. சுப. வீரபாண்டியன் அவகளின் செவ்வி ஒன்றை படித்தேன். "இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் எந்த ஒரு கூட்டத்திற்கும் எனக்கு அழைப்பு இல்லை" - என்று கூறியிருந்தார். இதனால் எழுந்த கோபத்தில் இதை எழுதுகிறேன்.

தங்களை பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் மேலே உள்ள உங்கள் அத்துனைபேரையும் ஒரு உணர்வுள்ள தமிழன் என்கிற முறையில் கேட்கிறேன், உங்களுக்கு பகுத்தறிவு என்றால் என்னவென்று தெரியுமா? இல்லை தெரிந்தே நீங்களும் மற்ற அரசியல்வாதிகள் போல் பெரியார் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றுகிரீர்களா?

நீங்கள் அத்துனைபேரும் பெரியார் பாசரையிலிருந்து வந்தவர்கள் என்பதை அறிவேன். ஆனால் உங்களில் ஏன் இப்படி ஒரு கொள்கை குழப்பம்? இல்லை பெரியார் குழப்பவாதியா? உங்களை பார்க்கும்போது பெரியார் மேல்தான் சந்தேகம் வருகிறது. எனக்கு தெரிந்தவரையில் கொள்கை குழப்பம் வருகிறது என்றால் அங்கே கொள்கையை விட "தான்மை (ego)" தலை தூக்கிவிட்டது என்றுதான் பொருள். தான்மை வந்துவிட்டால் அங்கே பகுத்தறிவு செத்தொழிந்தது என்று பொருள். அதனால்தான் கேட்கிறேன் உங்களுக்கு பகுத்தறிவு என்பதற்கு பொருள் மறந்துவிட்ட்டதா??

உங்கள் ஒவ்வொருவரின் தான்மை உணர்ச்சியால் பகுத்தறிவு மறந்து, கொல்கைகளை கூருபோட்டுவிட்டீர்கள். தனித்தனியே மூலைக்கொருவராய் நின்றுகொண்டு, நீங்கள் செய்யும் பணிகள் எதுவுமே எதர்க்காகவும் உதவப்போவதில்லை.

ஈழத்திலே புலிகள், நிலங்களை விட்டுக்கொடுத்து ஒரு புள்ளியில் திரண்டு 7 நாட்டு இராணுவ பலத்துக்கும் பதிலடி கொடுக்கிறார்கள். அவர்கள் நிலங்களை விட்டுக்கொடுக்காமல் ஆங்காங்கே இருந்த குழுக்கலாக போரிட்டிருந்தாள், இன்று பிரபாகரன் படத்திற்கு மலர்வலையம் வைத்து அஞ்சலி செய்துகொண்டிருந்திருப்போம்.

எனக்கு அழைப்பில்லை, உனக்கு அழைப்பில்லை - சாலையில் ஒருவன் அடிபட்டு கிடக்கும்போது என்னை கூப்பிட்டால்தான் வருவேன் என்று ஒரு சாதாரன தானி (auto) ஓட்டுபவன் நினைப்பதில்லை. இந்த இயல்புக்கு பகுத்தறிவெல்லாம் தேவை இல்லை. மனிதநேயம் போதும்.

ஈழ விவகாரத்தில், மனிதநேயம் தாண்டிய தமிழுணர்வு இருக்கிறது. மனிதநேயமோ, தமிழுணர்வோ இல்லாத இடத்தில் உங்களில் எவருக்கும் பகுத்தறிவு இருக்க வாய்ப்பில்லை என்றுதான் தோண்றுகிறது. இப்படி எழுதுவதற்கு மன்னிக்கவும். ஈழ விவகாரத்தில் ஒன்றினையாத யாரும் இனி பெரியார் பெயர் சொல்லி ஏமாற்றாதீர்கள், கருப்பு சட்டையை கழற்றிவிடுங்கள், பகுத்தறிவு முத்திரையை கிழித்துவிடுங்கள். நீங்களொவ்வொருவரும் ஒன்றினையாத வரையில் ஈழ முழக்கங்க்களுக்கு தமிழகத்தில் எந்த பயனும் இல்லை. இது முற்றிலும் உன்மை.

இன்னும் உங்களை பகுத்தறிவுவாதியாக நினைத்துக்கொண்டிருந்தால், இனியாவது சிந்தித்து செயல்படுங்கள்!!!

0 கருத்துகள்: