BARC ஆராய்ச்சியாளர்களுக்கு நடப்பது என்ன?

இடுகையிட்டது: வியாழன், 4 மார்ச், 2010 by Unknown in லேபிள்கள்:
5

திரு. மகாதேவன் (47), மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் (BARC) விஞ்ஞானி பிப்ரவரி 22 அன்று அவருடைய வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். முதலில் காவல்துறை இவரின் மரணம் ஒரு தற்கொலை என்று பதிவு செய்தது. பின்னர் இறந்த உடலை பரிசோதனைக்கு  உட்படுத்தியதில் இது கொலை என்று சந்தேகிக்கப்படுகிறது. 

திதாசு பால் (27), விஞ்ஞானி, மார்சு 3 அன்று இரவு, அவரது வீட்டில் தூக்கிலிடப்பட்டபடி இறந்திருந்தார். 

முதல் மரணம் நிகழ்ந்து 10 நாட்களுக்குள் அடுத்த மரணம். இருவருமே அணுவிஞ்ஞானிகள். மரணம் நிகழ்ந்த இடம், அவரவர் வீடு அதுவும் BARC-குடியிருப்பு. அதிபாதுகாப்பான இடம். திதாசு அவர்களின் மரணம் தற்கொலையா கொலையா என்று இன்னும் தெரியவில்லை. ஒருவேலை இதுவும் கொலையாயிருக்கும் பட்சத்தில் இவை இரண்டும் சாதாரன கொலைகளாக கொள்ள முடியாது. சில ஆண்டுகளுக்கு முன் பெங்களூரில் உள்ள IISC- ஆராய்ச்சிமைய வலாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டை மறந்திருக்க மாட்டோம். தீவிரவாத தாக்குதல்களுக்கு முக்கிய இலக்காகியிருக்கும் இந்தியா, இவற்றை சிறிதாக எடுத்துக்கொண்டால் அது முட்டாள்தனமாகிவிடும். 

இந்த மரணங்கள் தற்செயலான, தனிப்பட்ட காரணங்களுக்காக  நடந்ததாகக்கூட இருக்கலாம். ஆனால், தீவிரவாத தாக்குதல் என்ற கோணத்திலும் இதை பார்க்கவேண்டியது இன்றைக்கு கட்டாயமே. காலம் பதில்சொல்லும்வரை காத்திருப்போம்!

5 கருத்துகள்:

  1. நல்ல பதிவு , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  1. <<<
    BARC-குடியிருப்பு. அதிபாதுகாப்பன இடம். திதாசு அவர்களின் மரணம் தற்கொலையா கொலையா என்று இன்னும் தெரியவில்லை. ஒருவேலை இதுவும் கொலையாயிருக்கும் பட்சத்தில் இவை இரண்டும் சாதாரன கொலைகளாக கொள்ள முடியாது
    >>>

    ம்ம்ம்ம்... என்னதான் நடக்குது? சாமி செய்திகளில் அனைத்தும் மறைக்க படுகிறது...

    தயவுசெய்து, வோர்ட் வேரிபிகேசன் எடுத்து விடவும்

  1. @சசிகுமார்
    மிக்க நன்றி!

    @mastan
    //தயவுசெய்து, வோர்ட் வேரிபிகேசன் எடுத்து விடவும்//
    கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்

    @உலவு.காம்
    வாழ்த்துக்களுக்கு நன்றிகள்!

  1. தொழர் நளன் அவர்களே, இந்தச்செய்தியை யாரும் கண்டுகொள்ளவில்லையே என்று
    நினைத்தேன்.அரசுகளீன் அல்லது தொடர்புடைய நிருவனங்களின் நிலை இதில் என்ன? என தூண்டவேண்டும்.சங்கங்கள் இதனைச் செய்யவேண்டும்.