சிங்களத்திற்கு உதவும் இந்தியமே நன்றி, நன்றி!!!

இடுகையிட்டது: புதன், 7 ஜனவரி, 2009 by Viduthalai R Regina in லேபிள்கள்:
1

விடுதலைப்புலிகள் உருவாகி, பற்பல படிகள் வளர்ந்து, முப்படைகள் கொண்ட ஒரே விடுதலை இயக்கமாக நின்று, இன்று உலகமே கண்டு அஞ்சி, அவர்கள் விடுதலைப்போருக்காய் ஓர் அடையாளமாவதை விரும்பாமல், அதை அழித்தும் விடும் முடிவெடுத்து போர் செய்து கொண்டிருக்கிறது.

ஆனால், ’சே’ என்றழைக்கப்படும் சேக்குவாராவை அழித்தாலும் புரட்சியின் அடையாலமாய் இன்றும் உலகம் முழுவதும் இளைஞர்களின் (சேக்குவாராவின் வரலாறு தெரிந்தவர்/தெரியாதவர் அனைவரின்) சட்டைகளிலும், தொப்பிகளிலும் ’சே’ குடியேரியதை யாராலும் தடுக்க முடியவில்லை. சாலையோர கடைகளில் கூட சேக்குவாரா படமிட்ட மேல் சட்டைகள், கைக்குட்டைகள் தொங்குவதை பலரும் பார்த்திருக்களாம்.


”ஆதவனைக் கைமறைப்பார் இல்” – ’சே’ வும், பிரபாகரனும் விதிவிளக்கல்ல.


மேற்கூரிய புலிகளின் இந்த வளர்ச்சிக்கு ஆரம்ப காலத்தில் பேருதவி புரிந்த நம் இந்திய தேசம், இன்று இந்திய வாழ் தமிழர்களின் ஈழ உணர்வுகள் சாகாமல் இருப்பதிலும் பெரும்பங்காற்றியுள்ளது. தர்ர்காக்இந்தியமே உனக்கு நன்றி, நன்றி!!!


இந்தியாவில், புலிகளுக்கு தடைவிதித்ததை தொட்ர்ந்து, 17 ஆண்டுகளாக புனைக்கு யார் மணிகட்டுவது என்று இருந்து இருந்து, கடைசியாக விகடன், இந்தியா டுடே, குமுதம், இந்தியன் எக்ச்பிரச் என்று ஒருவர் மணிகட்ட, ஒவ்வொருவராய் பின் தொடர்ந்து, இன்று தமிழகமே ”புலிகள்” என்று வாய் திரந்து பீசுகிர்றது. இதற்காய் ஈழ தமிழர் அழிப்புக்கு இலங்கை அரசுக்கு கொடுத்த இராணுவ, ஆயுத உதவிகள் முதற்கொண்டு, இன்றளவில் அளித்துவரும் உளவுபிரிவு (ரோ) உதவிகள் அனைத்தும் சொல்லிளடங்காதது. இதற்காக


இந்தியமே உனக்கு நன்றி, நன்றி!!!


தமிழ் திரையியக்குனர் சீமான்! இவன் ஒரு போராளி என்பது எத்தனை பேருக்கு தெரியும் இந்தியம் நடத்தும் இந்த ஈழ போருக்கு முன்?? இதே சீமான் படங்களில் அவன் போராட்டமென்ன என்று சொல்லியிந்தால் கேட்க யாரும் திரையரங்கம் போயிருக்க மாட்டார்கள். இன்று அவன் போராட்டம் என்னவென்றும் அதன் நியாயங்கள் என்னவென்றும் தேனீர்கடைகளிலும் வாக்குவாதம் நடக்கிறது. இக்கல்வி தந்த


இந்தியமே உனக்கு நன்றி, நன்றி!!!


பழ. நெடுமாறன், குளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன் ஏனைய மூத்தக்குடிமக்கள், இவர்கள் யாரென்றே தெரியாதிருந்தனர் சாமானிய தமிழ் மக்கள். இவர்கள் இயக்கக்கருத்துக்களை மக்களிடம் எடுத்துச்செல்ல எத்தனையோ காலங்காலமாய் முயன்றும் கடுகளவாய் சிறுத்தே காணப்பட்டனர். இன்று இந்தியம் செய்து வரும் ஈழ துரோகத்துக்கு குரல் கொடுத்தப்பின் இவர்கள், பேர் சொல்லாத தொலைக்காட்சிகளும் மற்றைய ஊடகங்களும் இல்லை. அவர்களின் இத்தனையாண்டு உழைப்புகளுக்கு நற்பயன் ஈட்டுத்தந்தாய்,


இந்தியமே, உனக்கு நன்றி, நன்றி!!!


இவற்றையெல்லாம் தாண்டி, இங்கென் நண்பர் கூட்டத்தில், எப்போதாவது, புலியோ, ஈழமோ, மொழியோ வந்தால், இனம் தெரியாத மெளனம் பற்றிக்கொள்வது வழமை. இன்றானால், தாமே வந்து இன்று இந்த

செய்தி இணையத்தில் பார்த்தேன்… இன்று கிளிநொச்சி வீழ்ந்ததாம், இனி என்ன ஆகும்…. இன்னிக்கு இலங்கை news ஏதாவது இருக்கா… என்ற பேச்சுக்கள் வரும்போது, உன்னை மானசீகமாய் வணங்குகிறேன்,


இந்தியமே, உனக்கு நன்றி, நன்றி!!!


ஈழத்தை இராசீவ் கொலைக்குப்பின் என்ற கோணத்தில் பார்த்துக்கொண்டிருந்த வழமை மாற்றி, புலிகள் ஏன் தோன்றினார்கள், அவர்கள் வருவதற்குமுன் என்ன நடந்தது, ஏன் ஆயுதம் ஏந்தினார்கள், அவர்களின் அறப்போர்களை நசுக்கியது யார், இத்தனையும் கற்றுத்தந்தாய்… எழுத்தறிவித்தாய்… என் தமிழர், அறியாமை இருள் நீக்க பாடுபடும்


இந்தியமே, உனக்கு நன்றி, நன்றி!!! நன்றி, நன்றி!!!

1 கருத்துகள்:

  1. ers says:

    நெல்லைத்தமிழ் டாட் காம் சார்பில் புதிய திரட்டி...
    சோதனை ஓட்டத்திற்கு பின்வரும் முகவரியை சொடுக்குங்கள்.

    http://india.nellaitamil.com/