இலங்கையில் தமிழர்கள் - புலிகளுக்கு முன்

இடுகையிட்டது: வியாழன், 1 ஜனவரி, 2009 by Unknown in லேபிள்கள்:
0

இலங்கை-ஈழப்போராட்டமானது, பல நேரங்களில் புலிகள் தோண்றியதிலிருந்துதான் பார்க்கப்படுகிறது. புலிகளுக்கு முன் என்ன நடந்தது என்பதை மிகவும் முக்கியமான ஒன்று. " அந்த வரலாற்று நிகழ்வுகளை தெரிந்து கொள்வதன் மூலம், ஈழப்போராட்டத்தின் முழுவடிவத்தை நம்மால் உணரமுடியும். இது தொடர்பாக நான் வாசித்த சிலவற்றை இங்கு பகிற்ந்து கொள்கிறேன்.

இலங்கையில், தமிழ் மன்னர்களின் அரசுகள், வடக்கு, கிழக்கு, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் இருந்ததை கி.மு. 150-ல் தயாரிக்கப்பட்ட இலங்கை தீவின் வரைபடம் சுட்டுகிறது. 1505-ல் போர்த்துகீசியர்கள் இலங்கைக்கு வந்த போது, வடக்கு மாகாணத்தில் சங்கிலி மற்றும் கண்டியில் கண்டி ஆகிய தமிழ் மன்னர்கள் இருந்திருக்கிறார்கள்.மற்றும் 1803-ல் ரோச்மித் என்பர் தயாரித்து பின் லண்டனில் வெளியிடப்பட்ட வரைபடமும், அங்கு தமிழ் மற்றும் சிங்கள தேசங்கள் இருந்ததற்கான ஆவணமாக சுட்டப்படுகிறது. இதனால், தமிழர்கள் அங்கே பூர்வகுடிகள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தமிழர்கள், இலங்கைக்கு தேயிலை தொழிலாலர்களாய் இந்தியாவிலிருந்து போனார்கள் என்பதும், அங்கு பூர்வகுடிகள் சிங்களர்கள் மட்டுமே என்பது பார்பனர்களின் திட்டமிட்ட பரப்புறையே.

117 ஆண்டுகால போர்த்துகீசியர் ஆட்சி, பின் 112 ஆண்டுகள் டச்சுக்காரர்கள் ஆட்சி இரண்டிற்குப்பின், 112 ஆண்டுகள் இலங்கையை ஆண்ட ஆங்கிலேயர் 1833ல், 2 தமிழரசுகள் மற்றும் 1 சிங்கள அரசு - மூன்றையும் ஒன்றாக்கியது. பின் 1948-ல் விடுதலைப்பெற்ற இலங்கையை சிங்களர்கள் கைகளில் ஒப்படைத்துச்சென்றது. இந்தியாவில், பல இனங்களை ஒன்றினைத்து செய்த அதே தவறை, ஆங்கிலேயர் இலங்கையிலும் செய்துவிட்டனர்.

தமிழ், தமிழர்கள் மீது கட்டவிழ்துவிடப்பட்ட சிங்கள இன ஆதிக்கங்கள், அதன் பொருட்டு நடந்த அரசியல் நிகழ்வுகள்:

1. விடுதலைப்பெற்ற இலங்கையின் முதல் பிரதமர் டி.எச். சேனநாயகா - தமிழகத்திலிருந்து தொழிலாலர்களாய் சென்று ஒன்றிரண்டு தலைமுறையாய் இலங்கையில் குடியேரி, மலையகப்பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களின் குடியுரிமை / வாக்குரிமை பற்ப்பு.

1949 - வேலுப்பிள்ளை செல்வநாயகம் (தந்தை செல்வா) தமிழரசு என்ற கட்சியை துவக்கி இச்செயலை எதிர்த்தார்.

2. 1956 - பிரதமர், சாலமன் பண்டாரநாயகா - தமிழ் தள்ளப்பட்டு, சிங்களம் மட்டும் ஆட்சிமொழி என்று சட்டமியற்றப்படுகிறது.

இதனை எதிர்து தமிழர்கள் அரப்போரில் ஈடுபடுகின்றனர். இவர்கள் சிங்கள வெறியர்களால் தாக்கப்படுகிறார்கள். இதையடுத்து, தந்தை செல்வா தலைமையில் திருகோணமலையில் தமிழரசு கட்சி மாநாட்டில் தமிழ்ர் உரிமைக்குரல் கொடுக்கப்பட்டது.

3. மறியல் போர் - கோரிக்கைகள்
தமிழ் மாநிலங்களுக்குத் தன்னாட்சி
ஒற்றை ஆட்சிக்கு பதிலாக கூட்டாட்சி
தமிழுக்கும் சிங்கள்த்துக்கும் சம உரிமை
அனைவருக்கும் குடியுரிமை
தமிழர் பாரம்பர்ய நிலங்களில் சிங்களர் குடியேற்றத்தை நிறுத்துதல்

4. 1957 - இப்போராட்டங்கள் காரணமாக செல்வா - பண்டாரநாயகா ஒப்பந்தம் ஏற்பட்டது.

5. ஒப்பந்தம் ஏட்டளவில் : தொடர்ந்து 'சிறி'லங்கா - என்பதை தமிழர்கள் உட்பட அனைவரும் சிங்களத்தில் தான் எழுதவேண்டுமாய் சட்டம் - தமிழர்கள் எதிர்ப்பு - எதிர்தவர் மேல் தாக்குதல்.

6. 1958 - தமிழில் நுழைவுத் தேர்வுகள் எழுதலாம், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் நிர்வாகத்தில் தமிழைப்பயன்படுத்தலாம் என்றும் ஒரு சட்டம் வந்தது. இதுவும் ஏட்டளவில் நின்றது.

7. 1959 - சாலமன் பண்டாரநாயகா சிங்கள வெறியனால் (புத்த பிக்கு) சுட்டுக் கொலை. தொடர்ந்து, அவரின் மனைவி சிரிமாவோ பதவிக்கு வருகிறார்.

8. 1960 - நீதிமன்றங்களில் சிங்களத்தை மட்டுமே பயன் மொழியாக்கிய சட்டம்.

9. 1965 - நடந்த தேர்தலில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி, அய்க்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டு சிங்கள கட்சிக்குமே பெரும்பான்மை கிடைக்காமல், ஈழத்தில், 16 தொகிதிகளில் 14-ஐ வென்ற தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சியின் ஆதரவுடன் டட்லி சேனநாயகாவை பிரதமராகக் கொண்ட அய்க்கிய தேசியக் கட்சி பதவியேருகிறது.

10. தமிழர்களுக்கு மாவட்ட மன்றங்கள் அமைப்பதாகவும், தமிழை நிர்வாக மொழியாக்கவும் உறுதி கூறி, அதை நிறைவேற்றாமல், போனதால், தமிழரசு கட்சி அமைச்சரவையிலிருந்து விளகுகிறது.

11. 1970 - தமிழ் மாணவர்கள் மட்டும் பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு கூடுதல் மதிப்பெண் பெறவேண்டும் என்ற சட்டம் இயற்றப்படுகிறது.

12. 1972 - தமிழர்களை கலந்தாலோசிக்காமல், புதிய அரசியலமைப்பை உருவாக்கி, சிங்கள ஒற்றையாட்சி நிருவப்படுகிறது. சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என்பதற்கு சட்ட ஆங்கிகாரம் தரப்படுகிறது. தமிழும் ஆட்சிமொழியாக இருக்கல்ல்ம் என்ற திருத்தமும் ஏற்க மறுக்கப்படுகிறது.

இவ்வாரு 24 ஆண்டுகள் சிங்களருடன் தமிழர்கள் சமமாக அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டு கூட்டாட்சி அமையும் என்ற கணவு கணவாகவே ஆனது.

13. தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு, தமிழ்ர்களுக்கான விடுதலை பெற்ற நாடு வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தான் பதவி விலகிய காங்கேசன் துறை தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட்டு, அமோக வெற்றி பெற்று, தந்தை செல்வா, நாடாளுமன்றத்துக்கு சென்று "ஒரு தனித்தமிழ்நாட்டை இங்கு நிறுவியே தீருவோம். தமிழ் மக்களின் குரலாக நின்று இந்த அவையில் கூறுகிறென்" என்று முழங்குகிறார். பின் "தமிழர் அய்க்கிய விடுதலை முன்னணி"யை உருவாக்குகிறார்.

14. இதே ஆண்டு "தமிழ்ப் புதுப் புலிகள் இயக்கம்" உருவாகிறது.

15. 1974 - யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழர் மாநாட்டில் சிங்களர் கலவரம் செய்தனர். காவல் துறை தமிழர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில், 9 தமிழர்கள் மரணமடைகின்றனர்.

இப்போது, ஆவேசம் கொண்ட இலைஞ்ர்கள் ஆயுதமேந்த முற்படுகின்றனர்.

16. 1976 - தமிழர் அய்க்கிய முன்னணி கட்சி வட்டுக்கோட்டையில் கூடி தமிழ்ர்களுக்கு தனி நாடு கோரும் திர்மாணத்தை நிறைவேற்றுகிறது.

17. அதே ஆண்டில், தமிழ்ப் புதுப் புலிகள் இயக்கமானது, பிரபாகரனின் தலைமையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமாக உருப்பெருகிறது.

18. 1977, ஏப். 26 - தந்தை செல்வா மரணம்டைகிறார். மற்றும், சூலை மாதம் நடந்த தேர்தலில், தனிநாடு கோரிக்கையை முன்வைத்து, வடக்கு-கிழக்கு மாகாணங்களில், தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிட்டு, 19 தொகுதிகளில், 18 தொகுதிகளைக் கைப்பற்றுகிறது.

இந்த வெற்றி, அம்மக்களின் தனி நாடு உணர்வினை வெளிப்படுத்துகிறது. சிங்களம் மட்டுமே ஆட்சி மொழியானதால், தமிழ்ர்களுக்கு வேலைவாய்ப்புகளிலும் தடைகள் போடப்பட்டன. இத்தனையும் நடந்தேரிய பின்னரும் மேலும் பல அரப்போராட்டங்கள் நடைப்பெற்றும் பயன் தாராமல், எல்லாவற்றிர்க்கும் உச்சமாக 1983-ல் மிகப்பெரிய தமிழ் இனப்படுகொலை அரங்கேரியது. இதன் பின்னர். ஆயுதப்போராட்டம் என்பது முழுதாய் வடிவம் பெற்று, இன்று முப்டடைகளூம் கொண்ட ஒரே விடுதலைப்போராட்ட இயக்கமாக விளங்குகிரது புலிகள் இயக்கம். இந்த வரலாறு தெரியாததாலேயே பல தமிழர்கள், பார்ப்பன ஊடகங்களின் கண்கட்டி வித்தைகளில் மயங்கி அவர்களுடனே சேர்ந்து புலி எதிர்ப்பு கருத்துக்களைக்கொண்டுள்ளனர் என்பது உண்மை. இதை படிக்கும் சிலரேனும் சற்று சிந்தித்துப்பார்த்தால் நலம்.

நன்றி: ஒப்பந்தங்களை சீர்குலைத்தது யார்? - புத்தகம்; பெரியார் திராவிடர் கழகம் வெளியீடு.

0 கருத்துகள்: