இன அழிப்புக்கு துணைநிற்கும் இந்திய இராணுவத்தின் மீது வழக்கு தொடரலாமா...???

இடுகையிட்டது: வெள்ளி, 2 ஜனவரி, 2009 by Unknown in லேபிள்கள்:
0

இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் இன அழிப்புக்கு துணைநின்று, ஆயுதங்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கிய இந்திய இராணுவம் குற்றவாளியாக கருதப்பட வேண்டிய அமைப்பாகும். இலங்கையில் தற்போது நடந்துவரும் போரானது தொடங்கிய காலத்திலிருந்தே ஆயுதங்கள் வழங்கள், ரடார் நிருவியது, இலங்கை இராணுவத்திற்கு இந்தியாவில் போர் பயிற்சி அளித்தது மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய இராணுவ பொரியாலர்களை இலங்கையில் அந்நாட்டின் இராணுவத்துடன் பணியாற்ற பணித்தது ஆகியவை பல ஊடகங்கள் மூலமாக தமிழக மக்களுக்கு தெரிய வந்தது. இது தவிரவும் மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரியாமல் பல வகையான உதவிகள் இன அழிப்பில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசுக்கு செய்து வந்திருக்களாம் / கொண்டிருக்களாம் என்று, போர் நிருத்தததை அமுல் படுத்தக்கோரி இலங்கை அரசை வளியுருத்துவதில் இந்திய அரசு காட்டும் மெத்தன்ப்போக்கும், காலம் கடத்துதலாலும் சந்தேகிக்க வைக்கிறது.

இதனால், தொடர்ந்து இராணுவ மற்றும் மற்றைய உதவிகளை ஒரு இன அழிப்பு இராணுவத்திற்கு செய்து வரும் இந்திய இராணுவம் குற்றவாளியாக கருதப்பட வேண்டும். இதன் காரண்ங்களால், இந்திய இராணுவதின் மீது வழக்கு தொடர வேண்டும். இந்த வழக்கு இந்திய இராணுவத்திற்கு எந்த ஒரு அதிர்வையும் ஏற்படுத்தாது என்றாலும், அரசியல் ரீதியான சில பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும்.

இன அழிப்புக்கு துணைநிற்கும் இந்திய இராணுவதின் மீது வழக்கு தொடர்வது சரியா, இல்லையா??

0 கருத்துகள்: