பெண் ஏன் அடிமையானாள்?

இடுகையிட்டது: செவ்வாய், 30 டிசம்பர், 2008 by Unknown in லேபிள்கள்:
0

பெண் ஏன் அடிமையானாள்? என்ற புத்தகத்தை படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் முதல் அத்தியாயமான "கற்பு" என்ற தலைப்பில் தந்தை பெரியார் சொல்கின்ற கருத்துக்களில் சிலவற்றை இங்கு பகிர்ந்து கொள்ள விழைகிறேன். கற்பு என்ற சொல்லிலிருந்து பெண்மை வெளியேர வேண்டும் என்பதையும், சாஸ்திரங்களையும், நீதி நூள்களையும், சட்டங்களையும், மதங்களையும் இதைப்பொருத்து விலக்கி வைக்கவேண்டும் என்பதையும் படிப்படியாக, தெளிவாக விளக்கி இருக்கிறார். அவற்றிள் சிலவற்றை இங்கே தருகிறேன்.


முதலில், கற்பு என்ற சொல்லின் பொருளே நம்மிடத்தில் திரித்து சொல்லப்பட்டிருப்பாதாய் விளக்குகிறார்.

"கற்பு என்பது சொல் தவறாமை; அதாவது நாணயம், சத்தியம் ஒப்பந்தத்திற்கு விரோதமில்லாம்ல் என்கிறதான கருத்துக்கள் கொண்டதாக இருக்கிறது".

கற்பு என்பது ஏதோ பெண்களுக்கு மட்டுமே உரித்தான ஒரு சொல்லாக்கப்பட்டதே தவிர, அச்சொல்லின் உண்மையான விளக்கம் வழி வழியாக மறைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்.

"கற்பு என்பது பெண்களுக்கு மாத்திரம் சம்பந்தப்பட்டது என்பதற்குத் தக்க ஆதாரம் கிடைக்கவில்லை. அழிவில்லாதது, உறுதியுடையது என்கிற பொருள்களே காணக்கிடைக்கின்றன.... இந்த இடத்தில் சுத்தம் அதாவது கெடாதது, மாசற்றது என்பதாகத்தான் கொள்ளலாம். இந்த சுத்தம் என்கிற வார்த்தையும் கெடாதது என்கிற கருத்தில் தான் ஆங்கிலத்திலும் காணப்படுகிறது. அதாவது, சேஸ்டிடி (chastity) என்கின்ற ஆங்கில வார்த்தைப்படி வர்ஜினிட்டி (verginity) என்பதே பொருள் ஆகும். அதை அந்த பொருளின்படி பார்த்தால் இது ஆணுக்கென்றோ, பெண்ணுக்கென்றோ சொல்லாமல் பொதுவாக மனித சமூகத்திற்கே எவ்வித ஆண் பெண் புண்ர்ச்சி சம்பந்தமே இல்லாத பரிசுத்தத் தன்மைக்கே உபயோகப்படுத்தி இருக்கிறது என்பதைக் காணலாம். ஆகவே கற்பு என்பது பெண்களுக்கு மாத்திரம் சம்பந்தப்பட்டதல்ல.

ஆனால், ஆரிய பாஷையில் பார்க்கும் போது மாத்திரம் கற்பு என்கிற வார்த்தைக்கு அடிமை என்ற கருத்து நுழைக்கப்ப்டுகிறது என்பது எனதபிப்பிராயம். அதாவது பதியைக் கடவுளாகக் கொண்டவள், பதிக்கு அடிமையாய் இருப்பதையே விரதமாகக் கொண்டவள், பதியைத் தவிர மேறு யாரையும் கருதாதவள் எனப் பொருள் கொடுத்திருப்பதுடன் பதி என்கின்ற வார்த்தைக்கு அதிகாரி, எஜமான், தலைவன் என்கின்ற பொருள் இருப்பதால் அசிமைத்தன்மையை இவ்வார்த்தை புலப்படுத்துகின்றது".


உலகப்பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறலும் இதற்கு உடந்தையானதை கண்டு வியக்கிறார்.

"இந்த இடத்தில் நமது திருவள்ளுவரின் நிலைமையும் எனக்குச் சற்று மயக்கத்தையே தருகிறது. அதாவது, குறளில் வாழ்க்கைத் துணைநலத்தைப் பற்றிச் சொல்ல வந்த 6-ம் அத்தியாயத்திலும், பெண் வழிச்சேரல் என்பதைப்பற்றிச் சொல்ல வந்த 9-ம் அத்தியாயத்திலும், மற்றும் சில தனி இடங்களிலும் பெண்கள் விஷயத்தில் மிக்க அடிமைத்தன்மையும், தாழ்ந்த தன்மையும் புகுத்தப்பட்டிருப்பதாகவே எண்ண்க்கிடக்கின்றன."


இந்தச்சமுதாயம் என்பது, ஆண்களால் ஆண்களுக்காய் ஏற்படுத்தப்பட்ட சமுதாயமானதால், அதன் சட்டதிட்டங்களும் அதற்கேற்றார்போலவே இருப்பதில் வியப்பில்லை. அதை இங்கே இப்படி கேட்கிறார்.

"பெண்களைப் பற்றிய தர்ம சாஸ்திரங்கள் என்பதும், பெண்களைப் பற்றிய நூள்கள் என்பதும், பெண்களால் எழுதப்பட்டிருக்குமானாலும் அல்லது கற்பு என்கின்ற வார்த்தைக்குப் பெண்களால் வியாக்கியானம் எழுத ஏற்பட்டிருந்தாலும், கற்பு என்பதற்கு, "பதிவிரதம்" என்கின்ற கருத்தை எழுதியிருப்பார்களா? என்பதையும் யோசித்துப்பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்."



கற்பு என்ற கட்டுப்பாட்டிற்காக தன் உண்ர்வுகளையும், விடுதலையையும் விலங்கிட்டுக்கொண்டிருக்கும் பெண்மை இதனின்று வெளிவரவேண்டுமாய் கேட்கிறார்.

"கற்புக்காக புருஷனின் மிருகச் செயலைப் பொறுத்துக்கொண்டிருக்க வேண்டும் என்கின்ற கொடுமையான மதங்கள், சட்டங்கள் மாய வேண்டும். கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக்கொண்டு காதலும் அன்பும் இல்லாதவனுடன் இருக்க வேண்டும் என்கின்ற சமூகக் கொடுமையும் அழிய வேண்டும்".



பெரியார் என்றாலே "கடவுள் மறுப்பும்", "பார்ப்பன எதிர்ப்பையுமே" திரையிட்டுக்கொண்டிருப்பதால் அம்மனிதன் எதை நோக்கி இவ்விரண்டு கருவிகளையும் கையிலெடுத்தான் என்ற உண்மை விளங்காமலே போய்விட்டது. நம்மிடம் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் முழுவதையும் கலைவத்ற்க்காகவே இம்மனிதன் 93 வயதுவரை, நீரிழிவு நோயுடன், தன் மூத்திர வாளியுடன் ஊர் ஊராய்ச்சுற்றி, மேடை மேடையாய் பேசித்தீர்ந்து போனான்.


ஏற்றத்தாழ்வு - இது எந்த விடிவம் எடுத்தாலும் (ஆண்/பெண், உயர்/கீழ் சாதி) அங்கே பெரியார் முழங்கினார். இந்த ஏற்றதாழ்வுகள் அனைத்தின் வேற்களும், மதத்தின் பெயராலும், அதனுள் சாதியின் பெயராலும், இன்னும் ஆராய்ந்தால், கடவுளின் பெயராலுமே அரங்கேரிக்கொண்டிருப்பதால், அந்த வேறினையே அருக்க முற்பட்டார் என்பதே உண்மை. இந்த பேதங்கள் கடவுளின் பெயரால் இல்லாமல் இருந்திருந்தால் பெரியார், கடவுள் மறுப்பு சொல்லி இருக்க மாட்டார்; ஒருவேளை பேதங்களே இல்லாமல் இருந்திருந்தால், பெரியாரே இருந்திருக்கமாட்டார் என்பதும் உண்மை.




0 கருத்துகள்: