மும்மொழி திட்டம் - சரியான தீர்வா???

இடுகையிட்டது: சனி, 27 டிசம்பர், 2008 by Unknown in லேபிள்கள்:
4

தென் மாநில மாணவர்கள் பள்ளிகளில், முதல் மொழியாய் அவரவர் தாய் மொழி, இரண்டாவது மொழியாய் ஆங்கிலம் மற்றும் மூன்றாவது மொழியாய் வட மாநில மொழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து படிக்கலாம். அது போல வட மாநில மாணவர்கள் தங்கள் தாய் மொழியை முதல் மொழி, மற்றும் ஆங்கிலத்தை இரண்டாவது மொழி மற்றும் தென் மாநில மொழிகளில் ஒரு மொழியை மூன்றாம் மொழியாக தேர்ந்தெடுத்து படிக்களாம். இது தான் மும்மொழித்திட்டம். இத்திட்டத்திர்க்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

பொதுவாக இந்தி மொழிக்கு கொடுக்கப்படும் முன்னுரிமையை அடியோடு மறுப்பவன் நான். இது அம்மொழி தனியாதிக்கம் (MONOPOLY) செலுத்த வழிவகுக்கும் என்பது என் கருத்து. இதை பற்றி ஒரு முறை நண்பர்கள் சிலரிடம் வாதித்த செய்திகளை பின் யோசித்து பார்த்த போது (பொதுவாக பள்ளிகளில் சரியாக தமிழ் மற்றும் தமிழ் வராலாறு பற்றிய போதிய அறிவு தரப்படாத நிலையில், நகர மற்றும் மேல்தட்டு கலாசாரத்தில் உள்நுழையும் இளைஞ்ர்களுக்கு இதில் மாற்று கருத்து இருப்பதாய் நான் உணர்கிறேன்; தவரெனில் யாரேனும் திருத்தவும்) , ஏன் வட நாட்டினர் திராவிட மொழி ஒன்றினை கற்க கூடாது என்று தோண்றியது. இந்தியாவில், இந்திக்கு அடுத்தபடியாக அதிகமானவர்களால் பேசப்படும் மொழி, தெலுங்கு என்ற திராவிட மொழி. அதை ஏன் அவர்கள் கற்கக்கூடாது என்று தோண்றியது. ஆனால் இது விதண்டாவாதத்திர்க்காய் நான் யோசிக்கிறேனா இல்லை இதில் எந்த அலவுக்கு இதில் அர்த்தம் இருக்கிறது என்று அப்போது விளங்காததால் (உணர்ச்சிவசப்பட்டு இருந்ததாலும் :)) பிறகு யோசிக்கலாம் என்று விட்டு விட்டேன். பின் இந்த செய்தியை படித்ததும் திரும்பவும் இது பற்றி யோசிக்கத்தோண்றியது.  

இந்தி ஆதிக்கத்தை எதிர்ப்பவர்களை சில வகைகளாக பிரிக்கலாம். 1. இந்தி என்பது, சமசுகிறத்தின் வாரிசு. சமசுகிறதம், சேர, சோழ, பாண்டிய குலத்தவராக ஒன்றாக இருந்த நம்மை "மணிப்பிரவாளம்" என்பதை தோற்றுவித்து, நம்மிடமிருந்து சேரர்களை மலையாளிகலாக பிரித்ததும், பின் 1916ல் தினித்தமிழ் இயக்கம் காரணமாக நாமும், தமிழும் காப்பாற்றப்பட்ட வரலாறு அறிந்தவர்கள், இந்தியும் இப்பேற்பட்ட காயங்களை ஏற்படுத்தலாம் என்ற தொலைநோக்கு பார்வை கொண்டவர்கள். 2. இந்தி ஒரு வட மொழி. ஆரிய மொழி. நான் திராவிடன். தென்னவன். எனக்கு அம்மொழி தேவை இல்லை. ஒரு வேலை வடநாடு போகவேண்டுமானால் அப்போது கற்றுக்கொள்ளலாம், என்பவர்கள். 3. இந்தியா என்ற பல மொழி பேசும் மாநில கூட்டமைப்பில், ஒரு மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தால், அது மற்ற மொழிகளின் மேல் ஆதிக்கம் செலுத்தவள்ளது. அதனால் இந்த தனியாதிக்க சலுகை எந்த ஒரு மொழிக்கும் வேண்டாம் என்பவர்கள். இவை அனைத்துமே தத்தம் மொழியயின் மேல் பற்று கொண்ட அனைவருக்கும் சரி என்றே தோண்றும், புரியும். 

ஆனால், இந்தியா - ஒரு நாடு, என்று வரும் போதுதான் குழப்பங்கள் வருகிறது. எந்த பாடும் இல்லை, தனியாக பிரிந்திடுவோம் என்பவர் ஒரு பக்கம், அதெப்படி ஒன்றாய்தான் இருக்க வேண்டும், அதர்க்காக மொழியை விட்டுக்கொடுக்களாம் என்பவர் இன்னொரு பக்கம் (இவர்களில் பலருக்கு மொழி வரலாறு தெரிவதில்லை). நடு நிலையாக யோசிக்க வேண்டுமானால், இரண்டுமே தீவிரவாதங்கள் தான். விடுதலை பெற்று 60 ஆண்டுகள் ஒன்றாய் பல துறைகளில் முன்னேற்றங்கள் கண்டுள்ளோம். இன்னும் பல துறைகளில் முன்னேறிக்கொண்டிருக்கிறோம். பற்பல துறைகளை முன்னேற்றப்பாதையில் செலுத்த ஆரம்பித்துள்ளோம். இந்நிலையில் பிரிவிணை என்பது சரியான முடிவு அல்ல. அதர்க்காக, பெற்ற தாயை விட்டுக்கொடுக்கவும் முடியாது. என்னை பொருத்த வரையில் மொழி என்பது ஒரு இணத்தின் அடையாலம். மொழி அழிவோ, சிதைவோ அவ்வினத்தின் அழிவின், சிதைவின் ஆரம்பம். மொழி அழிவு பற்றிய ஒரு பதிவினை சில நாட்க்களுக்கு முன் படித்தேன். அதன் இணைப்பு இதோ. 


எல்லாம் சரி, இந்தியாவிற்கு மொழி பிரச்சிணையில் என்னதான் விடை? இது வரை தெரியவில்லை. ஒருவேலை இந்த மும்மொழி திட்டம் ஓரலவுக்காவது இந்த குழப்பங்களை சரி செய்யுமா??? எனக்கு பட்ட சில "+" மற்றும்  சில "-" இங்கு சொல்கிறேன்.

எனக்கு தெரியும் "+"-கள்:
1. அனைத்து இந்திய மொழிகளுக்கும் சரிசமமான வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
2. இலக்கியம் (literature) படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு சற்று அதிகமாக்கப்படும்.
3. மற்றவர்களின் கலாச்சாரத்தினையும் பண்பாட்டினையும் மாணவர்கள் மதிக்கக் கற்றுக்கொல்வார்கள்.

இது எல்லாம், இத்திட்டம் சரியாக செயல்பட்டால் மட்டுமே!!!

எனக்கு தெரியும் "-":
1. வட மாநிலங்கள் பொருத்தவரை தென் மாநில மொழிகளுக்கு சரிசமமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், தென் மாநிலங்களில், பெரும்பாலானோர் இந்தியை மட்டுமே மூன்றாம் மொழியாக தேர்வு செய்வார்கள். இங்கே மற்ற வட மாநில மொழிகள்.......... "???". 

இதன் காரணம், ஏற்கனவே அவர்கள் இந்தியை தேசிய மொழி என்று நம்பிக்கொண்டு முழுமையாய் இந்தியில் நணைந்துவிட்டதும், தென்நாட்டிலிருந்து செல்பவர்களை இந்தி கற்காததர்க்காய் குற்றவாளிகளாக்கியதும் தான் என்று தோண்றுகிறது.

எது எப்படியோ, இத்திட்டத்தினை அனைத்து மாநில அரசுகளும் சரியாக பரிசீலித்து, போதிய சட்டதிட்டங்களை உட்புகுத்தி அமுலாக்கினால் நலம் பயக்கும்.

4 கருத்துகள்:

  1. உங்கள் குழந்தை உங்களை "அப்பா"-னு கூப்பிடாம, "பாபா (இந்தியில் அப்பா)"-னு கூப்பிட்டா உங்களுக்கு மகிழ்ச்சியா. எனக்கு உங்களைப்போல பரந்த மனசு இல்லீங்க. மன்னிச்சுடுங்க.

  1. என்றாலும், வருகைக்கு நன்றி தமிழ்நெஞ்சம்.

  1. Om says:

    இந்தி எதிர்ப்பு பற்றிய blog:

    http://vetri-vel.blogspot.com/