"இந்தி பிரச்சனையா?"-பதிவிற்கு பதில் பதிவு

இடுகையிட்டது: வெள்ளி, 26 டிசம்பர், 2008 by Unknown in லேபிள்கள்:
0

http://nihr.wordpress.com/2008/10/23/hindifortamilians/

//வட இந்தியர்கள், இந்திக்கு எதிராக நம்வர்கள் செய்த வன்முறைகளை இன்னமும் மனதில் வைத்திருக்கின்றனர்.//
ஐயா, இந்திக்கு எதிராக நாம் மட்டும் வன்முறைகள் செய்யவில்லை, இந்தியா முழுக்க, இந்தி தாய் மொழி அல்லாத அனைத்து மாநிலங்களும் வன்முறைகள் செய்தன என்ற உண்மையை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். தமிழ் நாட்டில் அந்த வன்முறைகள் அதிகமானதற்குக் பல வரலாற்று காரணங்கள் இருக்கின்றது.

//அவர்களை பெறுத்தவரை இந்தி தேசிய மொழி, அதை அனைவரும் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கின்றனர். இந்தி தெரியாமல. திண்டாடும் போதுதான் இதன் அருமை தெரியும்.// ... //”இந்தி - இந்தியாவின் மொழியல்லவா? அதை நீங்கள் ஏன் கற்க்கவில்லை?”

பதில் சொல்ல முடியாமல் வாயடைத்து போனேன்!!
//

முதலில் இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்பது ஒரு பொய். திரும்பத்திரும்பச்சொல்லி, உண்மையாகக் கருதப்படும் ஒரு பொய். இந்தியாவிற்கு, 22 தேசிய மொழிகள் உள்ளன. இந்தி மற்றும் ஆங்கிலம், அலுவல் மொழிகள் (official languages). கீழ் காணும் இந்திய அரசின் இணைப்பில் "people" எனும் தலைப்பில், "languages" எனும் உபதலைப்பை பாருங்கள்.
http://india.gov.in/knowindia/india_at_a_glance.php

இந்தியர்கள் அனைவருக்கும் கட்டாயம் இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்பது தவரு. ஏனெனில், இந்தியர்கள் என்பவர்கள் மற்ற நாடுகளைப்போல் ஒரு தேசிய இனம் அல்ல. பல தேசிய இனங்களின் கூட்டமைப்பே இந்தியா. இதில் தெளிவு தேவை. இந்தியை ஒரு மொழியாக கற்றுக்கொல்வதில் எந்த தவரும் இல்லை. ஆனால், நீ இந்தியன் என்றால் இந்தி கற்றுக்கொல் என்பது ஒப்புக்கொள்ள முடியாது. இந்த கூற்று வராமல் இருந்திருந்தால், காலப்போக்கில் தமிழர்களும் சராசரியாக இந்தி கற்றிருப்பார்கள். ஆனால், நடந்தது வேறு. சரி மொழிக்காக ஏன் இத்தனை பிரச்சிணை?? மொழி என்பது தொடர்புக்கு மட்டுமல்ல, அது ஒரு இனத்தின் அடையாளம். இலங்கை பிரச்சிணையின் ஆரம்பமும் மொழியே. 1956, சாலமன் பண்டாரநாயகா - விடுதலைப்பெற்ற இலங்கையின் தேசிய மொழி சிங்களம் என்று சட்டம் இயற்றப்படுகிறது. சிங்களம் கற்றவற்கு வாய்புகள் அதிகம் வழங்கப்படு, பின் ஏதேதோ நடந்து இணப்பிரச்சிணைக்கு மொழியின் பெயரால் முதல் விதை விதைக்கப்பட்டது. இந்தியாவிலும், 1968-ல் தனித்தமிழ் நாடு கோரிக்கையும் இந்தி திணிப்பின் காரணமாக கோயம்பத்தூரில் வெளியிடப்பட்டது. இன்னொன்று, தனி நாடு கோறிக்கை தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் வேறு சில மாநிலங்களிளும் முலைத்தது என்ற உண்மையையும் இங்கே மறக்க வேண்டாம். இதை இங்கு சொல்ல வேண்டிய காரணம், ஏதோ தமிழ் நாடு மட்டும் தான், இந்தியை எதிர்த்ததாகவும், தனிநாடு கோறியதாகவும், இந்தியின் எதிரிகள், பிரிவினைவாதிகள் என்றெல்லாம் சித்திக்கப்படுவது பெரும் தவராகும்.

இந்த மொழி அரசியலை மறந்துவிட்டு பாருங்களேன், தூரம் மட்டுமே இதன் காரணமாய் உங்கள் கண்ணுக்கு தெரியும். இந்தி பேசும் மாநிலத்திலிருந்து பார்த்தால், தென்னிந்தியாவில், கர்நாடகம், பின் ஆந்திரம், பின் கேரலம் அதன் பின் தமிழகம்; இதுவே இந்தி மொழி தெரிந்தவர்களின் எண்ணிக்கையின் (இரங்கு) வரிசை. வடக்கே வரும் தெலுங்கர்களையோ, கேரளத்தினரையோ யாரும், இந்தி தெரியவில்லை என்றால், ஏன் என்று கேட்பதில்லை, ஆனால் தமிழர்களுக்கு மட்டும் இந்த கேள்வி வருவதுதான் தமிழர்களை நாம் ஏதோ தவரு செய்து விட்டதாக தோண்ற வைக்கிறது. இதன் காரணம், தமிழ் நாடு எடுத்துக்கொண்ட மொழிக்கொள்கை. இந்திய அரசின் மொழி சட்டங்களுக்கு, தமிழகம் ஓர் விதிவிலக்கு. இது சட்ட பூர்வமான விதிவிலக்கு. இதன் வரலாறு நமக்கு தெரியாததன் விளைவே இந்த கேள்விக்கு நம்மால் பதில் சொல்ல முடியாமல் போகின்றது.

இதில் இன்னொறு செய்தியை இங்கு சொல்ல விரும்புகிறேன். இந்தியா என்பது ஒரு கூட்டமைப்பு. தமிழ்ர்கு, தமிழகம் என்பது பிறந்த வீடு என்று கொண்டால்; இந்தியா என்பது புகுந்த வீடு. ஆங்கிலேயர்களுக்குப்பின் நாம் ஒன்றாய் வாழலாம் என்று ஏற்படுத்தப்பட்ட பந்தம் இது. இதைத்தான் வேற்றுமையில் ஒற்றுமை என்று அன்றைக்கே சொல்லி வைத்தோம். வேற்றுமையில் ஒற்றுமைதான் இவ்விரண்டையும் இணைந்து செயல்பட உதவும்.இரண்டு வீட்டு பெருமைகளையும் காப்பது என்பது அவசியமா, இல்லையா???

என் அனுபவம் ஒன்றை சொல்ல வேண்டும் இங்கே. நான், மகாராச்டிர மாநிலதில் ஒன்றறை வருடம் இருந்தேன், இன்று என்னால் இந்தி பேச முடியும். ஆனால் மராட்டி ஓரலவுக்கு புரிந்து கொல்லவும் ஓரிரண்டு வார்த்தைகள் பேசவும் தெரியும். அது போலவே, என்னுடன் வேலைபார்த்த ஆந்திர இளைஞ்ர் ஒருவர். 5 வருடங்களாக அங்கு இருக்கிரார். அவர் வரும்போது அவருக்கும் இந்தி தெரியாது. அவர் இன்று இந்தியில் வெளுத்து வாங்குவார். ஆனால் மராடியில் எனக்கு தெரிந்த அளவே அவருக்கும் தெரியும். மராட்டிய மண்னில் 5 ஆண்டுகள் வாழ்ந்து இந்தி கற்றுக்கொள்ள முடிகிரது, ஆனால் மராட்டியை அல்ல என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. அம்மொழியின் வளர்ச்சி என்பது "???". அனைவரும் ஒரு மொழி கற்றுக்கொல்ல வேண்டுமானால், இன்னும் காலப்போக்கில் இந்தியாவில், இந்தி தவிர மற்ற மொழிகளின் எதிர்காலம் என்ன?? ஐ.நா 2 வருடங்களுக்கு ஒரு மொழி உலகத்தில் இறந்து போகிரதாய் புள்ளி விபரம் கொடுக்கிறது. மொழி அழிவு என்பது இன்னொறு மொழியின் ஆதிக்கத்தால் மட்டுமே ஏற்படுகிறது. ஆக, இந்தியர் அனைவரும் கட்டாயம் இந்தி கற்க வேண்டுமானால், அது மற்ற மொழிகளின் அழிவிற்கான வித்தே ஆகும்.

இன்று, உலக வளர்சியில் உலகத்தினூடே வளர்பவர்கள் ஆங்கிலம் கற்கிரார்கள், வட இந்தியம் சென்று தொழில் செய்பவர்கள் இந்தியும் கற்கிரார்கள், இவ்வளவே. இதை பெரிதாக்கி ஊதாமல் இருந்தால், யாருக்கும் எந்த பிரச்சிணையும் இல்லை என்பதுதான் என் கருத்து.

0 கருத்துகள்: