ஈழத்தமிழர்களை பாதுகாக்க தமிழ் வலைப்பதிவர்கள் தொடர் போராட்டம்- பங்களிப்பு

இடுகையிட்டது: ஞாயிறு, 19 அக்டோபர், 2008 by Viduthalai R Regina in லேபிள்கள்: ,
3

ஈழத்து கவிதைகள்-
வலையில் சிக்கிய சிலவற்றை வாசித்துப்பார்த்தேன்
இரத்தச்சகதியாய் சந்தங்களுள் புதைந்துகிடந்தது;
தாய்மண்ணில் விடுதலைக்காய் துடிக்கும் குண்டுதுளைத்த இதயங்கள்...
இன்னமும் ஓயலையோ என இரத்தம் சொட்டச்சொட்டக் காத்துக்கிடக்கும் கண்கள்...
அன்னையை, தங்கையை, கோலூண்றும் தகப்பனை, மழலையில் களம் பார்க்கும் பச்சிளம்பிஞ்சினை,
விமானம் உமிழ்ந்த வேட்டுக்கு இரையிட்டதாய் வெடித்துச்சிதறிய கண்ணீர்த்துளிகள்...
"ஓ"வென்ற ஒப்பாரியால் கிழிந்துகிடந்த திருவாய் உதடுகள்...
இன்னும் எத்தனையோ... எத்தனையோ...!

அத்தனைக்கும் பக்கத்தில் சிதைந்துகிடக்குது குத்துயிராய் மனிதாபிமானம்...!!!


மனிதத்தை மாய்க்கும்போரினை எதிர்ப்போம், கருவி தந்து கொலை வளர்க்கும் இந்திய அரசுக்கு கண்டனம் எழுப்புவோம். ஈழத்தில் அமைதியை பெற்றெடுக்கும் முயற்சியாய் உயிர்த்திருக்கும் தமிழ் வலைப்பதிவர் தொடர் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

3 கருத்துகள்: