மாநிலப் பார்வை, தேசிய பார்வை - எது முதலில் வேண்டும்?
இடுகையிட்டது: ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012 by Unknown in லேபிள்கள்: சிந்தனைக்கு, வரவேற்பு
நேற்றைய பெரிதினும் பெரிது
கேள் (11.02.2012)
நிகழ்வின் தலைப்பு,
"மாநில பார்வைக்குப்
பிறகு தேசிய பார்வையா ,
அல்லது தேசிய பார்வைக்குப்
பிறகு மாநில பார்வையா -
எது முதலில் வேன்டும்.
இதில் ஸ்டெல்லா மாரிஸ்
கல்லூரி மாணவிகளும்,
மகளிர் கிருஸ்தவ கல்லூரி
மாணவிகளும் கலந்துகொண்டு
வாதிட்டனர்.
இதில் தேசிய பார்வைக்குப்
பிறகுதான் மாநில பார்வை என்று
வாதிட்ட ஸ்டெல்லா மாரிஸ்
கல்லூரி மாணவிகள் வெற்றிபெற்றனர்.
இதில் முதல் சந்தோஷம்,
சென்னை கல்லூரி பெண்களின்
தமிழ். இரண்டு
பக்கமும் தடுமாறும் 'டமில்'
பெரிதும் இல்லாமல் வாதிட்டது
பெரிய மகிழ்ச்சி.
அதுக்காக,
ஆங்கில வாடை எல்லாம் குறைவா
இருந்ததுன்னு சொல்ல முடியாது.
ஆனா, தமிழ்நாடுத்
தமிழை (தமிlish)
குறைவில்லாம பெசினாங்க.
நல்ல விடயம்.
ஆனா எனக்கு உறுத்தின விடயம்,
மாநில பார்வை பக்கம் பேசின
மகளிர் கிருஸ்தவ கல்லூரி
மாணவிகள் கிட்ட பெரிசா வாதங்களே
இல்லாததுதான்.
கொஞ்சம் ஏமாற்றாமாவே
இருந்ததுன்னு கூட சொல்லலாம்.
உணர்ச்சி வேகத்துல மேலோட்டமா
பேசினாங்களே தவிர வலுவான
வாதங்கள் இல்லை.
தகவல்கள் இல்லை.
எந்தெந்த விடயங்கள்ல தேசிய
பார்வை பின்னடைவை ஏற்படுத்துன்னு
தெளிவான சிந்தனைகளை எடுத்து
வைக்க தவரிட்டாங்க.
ஏதோ வாதங்களே இல்லாத தலைப்பை
கொடுத்து வாதிட வெச்ச மாதிரி
தெரிந்தது.
தேசிய பார்வை என்கிற வாதம்
ரொம்பவே சுலபமானது.
ஒரு தேசம் என்கிற போது
அனைத்து மக்களையும் சற்றேழத்தாழ
ஒரே கண்ணோடத்துடன் அனுகுவது
சாத்தியமாகும்.
அவர்களை ஒருங்கிணைப்பதற்கு,
ஒரு வரலாறு,
ஒரு பன்பாடு,
ஒரு கலாச்சாரம் என்று
இருகும். ஆனால்,
இந்தியா என்பது பல வேறுபட்ட
தேசிய இனங்களை கொண்டது.
பல வேறுபட்ட வரலாற்றையும்,
பன்பாட்டு விழுமியங்களையும்,
கலாச்சாரத்தையும் அடிப்படையாகக்
கொண்ட இனங்கள் வாழும் ஒன்றியம்.
அதன் காரணமாக ஒரு அல்லது
ஒன்றுபட்ட தேசிய பார்வையில்
ஏற்படும் சிக்கல்களையும்
அலசியிருந்தால் நன்றாக
இருந்திருக்கும்.
மொழி, இனம்
என்கிற உணர்வடிப்படையான
இடங்களைத்தாண்டி,
மாநிலங்களுக்கான உரிமை,
பொருளாதார சுதந்திரம்,
சமூக நீதி சார்ந்த மேம்பாடுகள்
இப்படி எத்தனையோ விடயங்கள
தொட்டு பேசியிருக்கலாம்.
விடுதலை பெற்று அறை நூற்றாண்டு
ஆன பின்னும் அப்படியே இருக்கும்
இந்திய அரசியலமைப்பு,
ஐக்கிய அமேரிக்கா,
ஐரோப்பிய ஒன்றியம்
ஆகியவற்றின் நன்மை/தீமைகள்
- இவற்றில்
இருந்து இந்திய ஒன்றியம்
கற்றுக்கொள்ள வேண்டியது
என்ன, போன்ற
செய்திகளையும் கையாண்டிருக்கலாம்.
எந்த துறைகளில் தேசியப்
பார்வைக்கு முதலிடம் கொடுக்க
வேண்டும், எந்த
துறைகளில் மாநில பார்வைகளுக்கு
முதலிடம் கொடுக்கவேண்டும்
என்ற கருத்தாக்கங்கள்
வந்திருந்தால் இன்னும் நன்றாக
இருந்திருக்கும்.
இவை எல்லாம் இருந்தாலும்,
இதுபோன்ற கணமான தலைப்புகளை
எடுத்து, மாணவர்களை
கையாளச்செய்ததற்கு விஜய்
டீவியை பாராட்டியே ஆகவேண்டும்.
'முன் ஜென்மம்',
'எல்லாவற்றுக்கும் ஆசைப்படு
போன்ற மூலைக்கு விலங்டும்
நிகழ்ச்சிகளை கொண்டிருந்தாலும்,
சிந்தனையை தூண்டும்
கருத்தாழமிக்க இதுபோன்ற
நிகழ்ச்சிகளையும் கொண்டிருப்பது
வரவேற்கவேண்டிய ஒன்று.
முழு நிகழ்ச்சிக்கான
இணைப்பு கீழே:
http://www.tamilkey.com/perithinum-perithu-ke-11-02-12-vijay-tv.html
hats off viduthalai