புத்தாண்டுத் தீர்மானம்!

இடுகையிட்டது: செவ்வாய், 30 டிசம்பர், 2014 by Viduthalai R Regina in
0

கிரிஸ் ஆஸ்டின் ஹேட்பீல்ட் - இவர் கணேடிய நாட்டைச்சேர்ந்த அந்நாட்டின் முதல் விண்வெளி வீரர். இவர் பூமியைச்சுற்றிக்கொண்டிருக்கும் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் பலமுறை பயனம் செய்து, தன்னுடைய கடைசி பயனத்தில் கமாண்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தன் விண்வெளி பயனத்தின் போது சமூக ஊடகங்களின் மூலம் மக்களுக்கு பூமியைப்பற்றிய பல அறிய தகவல்களையும் புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டு அதன் மூலம் பிரபலமடைந்தவர். விண்வெளியில் இருந்து கிடார் வாத்தியம் இசைத்து பாடிய முதல் மனிதர் என்ற பெருமையும் பெற்றவர். விண்வெளி வீரர்கள் பலர் சமூக ஊடகங்களின் வழியாக மக்களை சென்றடைகின்றார்கள் என்றாலும், இவர் அளவுக்கு பிரபலமானவர்கள் வேறு யாரும் இல்லை என்றே சொல்லலாம். அதர்க்கு ஒரு முக்கியமான காரணமாக நான் கருதுவது அவருடைய தகவல் பரிமாற்று திரண் (communication skill). தன்னுடைய எளிமையான அதேநேரத்தில் மற்றவரை சிந்திக்க வைக்கும் அவரின் பேச்சு மற்றும் எழுத்துத்திரண் தான் அவரை உலகின் பல மூலைகளுக்கும் கொண்டு சேர்த்திருக்கின்றது. ஹேட்பீல்ட் பற்றி மேலும் அறிந்துகொள்ள அவரின் விக்கிபீடியா பக்கத்தைப் பார்க்களாம்.

அவருடைய யூடியூப் தளத்தில் புத்தாண்டில் அனைவரும் தீர்மானம் எடுத்துக்கொள்ள ஊக்குவிக்கும் விதமாக ஒரு காணொளியை அவர் பதிவேற்றியிருந்தார். அதை என் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டபோது இதை தமிழில் மொழி பெயர்த்தால் நன்றாக இருக்கும் என்று நண்பர் +abbas ali சொல்லியிருந்தார். அந்த காணொளியும் அதன் தமிழாக்கமும் கீழே. இந்த காணொளியில் சொல்லப்பட்டிருக்கும் செய்தி அடிப்படை வசதிகள் பற்றியது. ஆனாலும் தமிழ் நாட்டில் அணுமின், மீத்தேன் எதிர்ப்பு குரல்கள் பலமாக ஒலித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்த செய்தி கொண்டு சேர்க்கும் கருத்து எல்லா பிரச்சினைகளுக்கும் பொருந்தும் என்றே நினைக்கின்றேன். 


தமிழில்: 
நாம் எல்லோரும் வெகு வேகமாய்ப் போய்க்கொண்டிருக்கின்றோம். பூமத்திய ரேகைக்கு மெலே நாம் நிற்கும்வேளையில், நமக்கு கீழே இந்த உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது. நாம் எல்லோருமே மணிக்கு சும்மார் 1000 மைல் வேகத்தில் ரொம்ப வேகமாய் போய்க்கொண்டிருக்கிறோம். ஒரு நாழிகை, நின்று பார்த்தால் என்ன? இங்கே, எல்லாவற்றிலும் பிரச்சினை இருக்கிறது. எதுவும் சரி இல்லை. ஆனால் இங்கு எதுவும் சரியில்லை என்பது வருந்தி புலம்புவதற்கு உன்டன் காரணம் இல்லை. எதுவும் சரியில்லை என்பது அதை சரிசெய்து சாதிப்பதற்கான காரணியாகும். நம் உலகம் நாம் பலநேரங்களில் கோருவதை விடவும் ஒரு நல்ல இடமாகத்தான் இருந்திருக்கின்றது. ஆரோக்யம், நல்வாழ்வு ஆகியவற்றைப் பொருத்தவரை நாம் இன்று சிறந்ததொரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எழுத்தறிவு என்பது பல ஆண்டுகளாக சீராய் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. 

படம்: உலக எழுத்தறிவு: 1950ல் 55% ; 2010ல் 81%

அதிகமான மக்கள் அதிக காலம் உயிர்வாழ்கின்றார்கள். குழந்தை பிறப்பின் போது ஏற்படும் தாய் மற்றும் சேய் இரப்புக்கள் பற்பல மடங்குகள் குறைந்துள்ளன. இதனால் பல மில்லியன் உயிர்கள் காப்பாற்றாப்பட்டுள்ளன.

படம்: 1950ல் 100க்கு 15 குழந்தைகள் பிறக்கும் போது இறந்திருக்கின்றன.

 படம்: 2010ல் 100க்கு 2 குழந்தைகள் மட்டுமே பிறக்கும் போது இறந்திருக்கின்றன.

பல கொடிய நோய்கள் முழுமையாக விரட்டப்பட்டுவிட்டதை பார்த்திருக்கின்றோம். 

படம்: 1980களில் பெரியம்மை முழுதுமாக ஒழுக்கப்பட்டது. 2011ல் ரைன்டர் பெஸ்ட் (கால்நடைகளுக்கு வரும் உயிர்கொள்ளி பிளேக் வகை நோய்) முழுதுமாக ஒழுக்கப்பட்டது.
மேலும் பல நோய்களை இல்லாமல் செய்யும் வேலைகள் சிறப்பாகவே நடந்துகொண்டிருக்கின்றன.

படம்: 2000ஆவது ஆண்டிலிருந்து 2009 வரை மலேரியாவால் இரந்தவர்கள் எண்ணிக்கை (வெள்ளை நிர சட்டங்கள்), மற்றும் அதே ஆண்டுகளில் மலேரியா நோய் தொடர்பான ஆய்வுகளுக்கான நிதியின் அளவு (நீல நிர கோடு). நிதியின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, இரப்புகள் குறைந்துள்ளன.

நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை என்பது சில மனிதர்கள் இந்த பிரச்சினைகளை, சிக்கல்களை சவால்களை சரி செய்வதற்காக போர்குணத்தோடு செய்த போராட்டத்தால் கிடைத்தது. சென்ற 100 ஆண்டுகளில் நாம் ரைட் சகோதரர்களை படமெடுத்தது முதல் 800 மில்லியன் (800,000,000) மைல்கள் தொலைவில் உள்ள சனி கிரகத்தின் நிலவுகளில் ஒன்றான டைட்டனில் ஒளிப்படக்கருவியொன்றை இறக்கியது வரை செய்து முடித்திருக்கின்றோம். இந்த உலகத்தில் மாற்றத்தைக்கொண்டுவருவதற்காக உழைக்கும் அமைப்புகளும், அறக்கட்டலைகளும் பெருகிய வண்ணம் இருக்கின்றன. இவை எல்லாம் இணைந்து ஏழை மக்கள் பசியிலிருந்தும் ஏழ்மையிலிருந்தும் அவர்களை விடுவித்துக்கொள்வதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றன. 

படம்: பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அரக்கட்டலை 2014 நவம்பர் வரை 42.3 பில்லியன் (42,300,000,000) டாலர்களை நன்கொடை செய்துள்ளது.

படம்: சுமார் 2.5 பில்லியன் (2,500,000,000) அடிப்படை வசதியற்ற மக்களுக்கு கழிப்பறை வசதி.

படம்: சுமார் 100 மில்லியன் (100,000,000) குழந்தைகளுக்கு நோய்தடுப்பூசிகள். ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 2.5 மில்லியன் குழந்தைகள் நோயிலிருந்து காக்கப்படுகின்றனர்.

இதையெல்லாம் நினைத்துப்பார்க்கும்போது இவ்வாண்டு நன்னம்பிக்கை கொடுக்கிறது. அதே சமயம், யாரும் இந்த உலகத்தை எந்த சிரத்தையும் இன்றி தாமாமவே மாற்றிவிடவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எல்லாமே ஒரு தீர்மானத்தில் தான் தொடங்குகிறது. புத்தாண்டில் உங்கள் தீர்மானம் என்ன?ஒவ்வொரு மாற்றமும் ஒரு தனிமனிதனின் ஒரு தீர்மானத்தில் ஆரம்பிக்கிறது. தெருமுனைக் கூட்டங்களிலும், சுவரொட்டிகளிலும், பேஸ்புக், டிவிட்டர் தளங்களிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி பதிவு போட்டுவிட்டு நகரும் நாம் தனி மனிதனாக நாம் செய்யவேண்டிய பங்களிப்பைச் செய்கின்றோமா? 10 நிமிடம் நடக்கும் தூரத்திற்கு பெட்ரோலை எரித்து இரு சக்கர வாகனத்தில் போகின்றோம், மின் விசிரி போதிய இடத்தில் குளிர் சாதனம் பொருத்திக்கொள்கின்றோம், இரவு உரங்கச்செல்லும் முன் தொலைக்காட்சியை ரிமோட்டில் மட்டும் அனைத்துவிட்டு மின்னினைப்பை தூண்டிக்காமல் விட்டு விடுகின்றோம், அலுவலகக்காகிதமானால் இன்னும் இரண்டு பக்கம் சேர்த்து அச்சிடுகின்றோம். இதெல்லாம் சின்ன சின்ன விஷயங்கள் தான் ஆனால், எல்லோரும் எரிக்கும் ஒரு 10 நிமிட நடை தூரத்திற்கான பெட்ரோலும், குளிர் சாதனமும், அனைக்காமல் விட்ட தொலைக்காட்சியும் அனுமின் ஆலைகளின் கதவுகளை பெரிதாக திறக்கவும், மீத்தேன் வயல்களின் ஆழத்தையும் அகலத்தையும் அதிகரிக்கவுமே செய்யும். நாம் ஒவ்வொருவரும் தேவை இல்லாமல் அச்சிடும் ஒவ்வொரு தாளும் தேவைக்கதிகமாக வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் ஈடாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நம் தனிமனித நடத்தையிலிருந்தும், நம் ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் ஆரம்பிக்கப்படவேண்டியது. இந்த புத்தாண்டில் உங்கள் தீர்மானம் என்ன?

0 கருத்துகள்: