பாபா (பேராசிரியர்) நரேந்திர நாயக் - குருக்களுக்கெல்லாம் பெரிய குரு
இடுகையிட்டது: சனி, 20 ஆகஸ்ட், 2011 by Unknown in லேபிள்கள்: சிந்தனைக்கு
"எல்லா குருக்களுக்கும் குரு நான்" - இப்படித்தான் பேச ஆரம்பிக்கிறார் பேராசிரியர் நரேந்திர நாயக். “ஏன்னு கேக்றீங்ளா, ஒவ்வொர் குருவும் ஒவ்வொர் அதிச்யம் செய்வான், நான் பாபா நரேந்திரா, அவங்கோ எல்லார் செய்றதையும் நான் ஒர்தனே செய்வேன்" என்று கண்ணடம் கலந்த தமிழில் சொல்லி சிரிக்கிறார்.
சூடம் கொளூத்தி நாக்கில் வைத்துக்கொண்டு, சிறிது நேரம் எரிய விட்டுவிட்டு அப்படியே வாயை மூடி அமைக்கிறார். பின் நாக்கை வெளியில் காட்டிவிட்டு "ஒன்னுமே ஆகலை, ஒன்னுமே ஆகாது" என்று சொல்லிவிட்டு கூட்டதிலிருந்து யாரையாவது அழைத்து அவருடைய நாக்கிலும் சூடத்தை ஏற்றி இறக்கி காண்பிக்கிறார். "ஏன் ஒன்னுமே ஆகாது...?" என்று அறிவியல் விளக்கம் கொடுக்கிறார். வெறும் கையை காற்றில் அசைத்து நிறைய திருநீறு வரவழைத்து அனைவருக்கும் கொடுக்கிறார். பின் எல்லோரையும் சுவைத்து பாருங்கள், முகர்ந்து பாருங்கள் என்று சொல்லுகிறார். “நிஜமான திருநீறு போலவே இருக்கா?” என்று கேட்கிறார். நாம் ஆமாமாம் என்று சொன்னது, “ஆமா, அப்டிதான் இருக்கும், ஏன்னா உங்க சாமி வாங்ற கடைலேதான் நாங்களும் திருநீறு வாங்றோம், அவங்க 'டன்' கணக்குள வாங்வாங்க நாங்க 'கிலோ' கணக்குள வாங்வோம், அதான் வித்யாசம்" என்று சொல்லி கூட்டத்தில் சிரிப்பளைகளை எழுப்புகிறார்.
பேராசிரியர் நரேந்திர நாயக். கர்ணாடகா மாநிலம் மங்களூரை (Mangalore) சேந்தவர். கஸ்தூர்பா கல்லூரியில், அடிப்படை அறிவியல் மையத்தில் (Center for Basic Sciences), உயிர்-வேதியியல் (Bio-chemistry) துறையில் துனை பேராசிரியராக பணியாற்றிவந்தார். சிறு வயது முதலேயே தனக்கு எல்லாவற்றையும் கேள்விகேட்டு பழக்கப்பட்டதால் தான் ஒரு நாத்திகனாக மாறியதாக சொல்கிறார். பின் படிப்படியாக தன்னைச்சுற்றி நிகழும் மூட பழக்கவழக்கங்கள், அதிசயங்கள் என்று எல்லோராலும் நம்பப்படும் சம்பவங்கள், சாமியார்கள் என்று எல்லோரும் செய்யும் அறிவிற்கு சம்பந்தம் இல்லாத செயல்களை கண்டு, அதை கேள்வி கேட்க ஆரம்பித்தார், பின் தன் அறிவியல் அறிவைக்கோண்டு, புரியாமல் அவற்றை நம்பிக்கொண்டிருக்கும் மக்களுக்கு விளக்கவும் ஆரம்பித்தார்.
1976-ல் தக்ஷ்க்ஷின கண்ணடா பகுத்தறிவாளர் கழகத்தை (Dakshina Kannada Rationalist Association) தொடங்கி அதன் மூலம் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக சிறு சிறு செயல் விலக்கக் கூட்டங்களை நடத்தத்தொடங்கினார். பின்னர் இந்திய பகுத்தறிவாளர் கழக சம்மேளனத்தின் தலைவராக நியமிக்கபட்டார். மூட நம்பிக்கை ஒழிப்பு, அதிசயங்கள் என்று நம்பப்படும் சம்பவங்களை ஆராய்தல், அதர்க்கான அறிவியல் விளக்கங்களை எடுத்து புரியவைத்தல், போலிச்சாமியார்களின் தந்திரங்களை அம்பளப்படுத்தி அவர்களின் முகத்திரையை கிழித்தல் என்று இவர் பணிகளின் பட்டியல் நீள்கிறது. தன்னுடைய அறிவில் கல்வி மற்றும் தேர்ச்சி இந்த மூட நம்பிக்கைகள் மற்றும் அதிசயங்களாகச்சொல்லப்படும் விஷயங்களின் வேர்வரை சென்று ஆராந்து பார்ப்பதர்க்கு உதவியாக இருப்பதாக சொல்கிறார். ஆனால், இந்த பணிகளை தடங்களின்றி செய்வதற்கு தன்னுடைய பேராசிரியர் வேலை தடங்களாக இருப்பதாக உணர்ந்ததால் அதை உதரித்தள்ளிவிட்டு இப்போது முழுநேர பகுத்தறிவு இயக்கமாகவே மாறிவிட்டார்.
இந்தியாவில் இயன்றலவு மூலை முடுக்குகளுக்கும் பெருநகரங்களுக்கும் சென்று இளைஞர்களுக்கு பயிர்ச்சி வகுப்புகளும், பொதுமக்கள் சந்திப்புகளையும் செய்து கொண்டிருக்கிறார். இது வரை 2000த்துக்கும் மேற்பட்ட செயல்முறை விலக்கக்கூட்டங்களை நிகழ்த்தியிருக்கிறார். இவையெல்லாம் சுலபமாக நடந்துவிடவும் இல்லை. பல நேரங்களில் மதத்தீவிரவாதிகளினாலும், மூடநம்பிக்கைகளை வைத்து பிழைப்பு நடத்தும் சாமியார்களினாலும் ஆபத்துகளை சந்தித்திருக்கிறார். ஆனாலும், இவை எதுவும் இவருடைய பயனங்களை தடுத்துவிடவில்லை. 60 வயதை கடந்துவிட்ட பேராசிரியர் நரேந்திர நாயக் ஓராண்டில் கிட்டத்தட்ட 200 நாட்கள் இந்தியாவின் பல மூலைகளுக்கு பயனம் செய்கிறார். தமிழ்நாட்டில் பகுத்தறிவாளர்களானாலும் ஒரே மேடையில் ஏர மறுக்கும் வெவ்வேறு இயக்கங்களுடனும் இணைந்து செயலாற்றுகிறார். ஆனால் யாரையும் குறைசொல்லாமல், "யாருக்கு எங்கே பலம் இருக்கோ, அவர்கள் அங்கே என்னை பயன்படுத்திக்கொள்கிறார்கள், நம் தேவை பிரச்சாரம் அது யாரால் நடந்தால் என்ன" என்று பேசுகிறார்.

இது தொடர்பில் ஐரோப்பிய சுற்றுப்பயனத்தில் இருந்த பேராசிரியர் நரேந்திர நாயக் அவர்களை டென்மார்க் நாட்டின் ஓர்கூஸ் மாநகரத்தில் வாழும் இந்தியர்கள் சார்பில் ஒரு அறிவியல் விளக்க நிகழ்வுக்காக அழைப்பு விடப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு காவி உடையில் செயல்படும் போலி சாமியார்களை பற்றியும் அவர்கள் எதைக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள், மேலை நாட்டு மக்கள் எதை பார்த்து ஏமாந்து இவர்களை நோக்கி இந்தியா வருகிறார்கள் என்பது பற்றி விளக்கங்கள் அளித்தார். இந்தியர்கள், இலங்கியர்கள் மற்றும் டென்மார்க் குடிமக்களும் இதில் கலந்து கொண்டு பேராசிரியர் நரேந்திர நாயக் அவர்களின் பணிக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.
இந்தியா பொருளாதாரதில் மேலை நாடுகளை மூந்திக்கொள்ளக்கூடிய வேகத்தில் வளர்ந்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியின் ஊடேயே அதே வேகத்தில் மூலைக்கு மூலை காவி முகமூடிகளும், தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி மூடநம்பிக்கைகளை பாதுகாத்துக்கொண்டிருப்பவர்களும் அதிகரித்த வண்ணமே இருக்கிறார்கள். இது இந்திய மக்களின் அறிவுக்கும் அறிவியல் திறனுக்கும் விடப்பட்டிருக்கும் சவால் என்றே நான் கருதுகிறேன். அறிவியல் என்பது வெறும் 'ஏட்டுச்சுரைக்காய்' என்றே இங்கு பார்க்கப்படுகிறது. இந்திய கல்வித்திட்டங்கள் பெரும்பாலும் அறிவியல் சார்ந்த வாழ்வியலை மாணவர்களுக்கு கொடுப்பதில்லை. அவர்களை சிந்திக்கும் திறன் கொண்டவர்களாக ஆக்குவதில்லை. பள்ளிகளில் தொடங்கி, அரசு அலுவலகங்கள் முதல் அறிவியலையும் தொழிற்நுட்பங்களையும் வளர்க்கும் தேசிய ஆய்வுக்கூடங்கள், மையங்கள் வரை மதத்தின் பெயராலும், பன்பாட்டின் பெயராலும் மூடநம்பிக்கைகளை வளர்க்கும் இடங்களாகவே இருக்கின்றன. இப்படி சமூகத்தின் அனைத்து தளங்களிலும் வேறூன்றிக்கிடக்கும் மூடநம்பிக்கைகளை கலையாமல் விட்டால், பொருளாதாரத்தில் நாம் பெறும், பெறப்போகும் வெற்றிகளை கையாளவோ, தக்கவைத்துக்கொள்ளவோ இயலாதவர்களாக ஆகிவிடுவோம். இந்த நேரத்தில் பேராசிரியர் நரேந்திர நாயக் போன்னோறின் பணி அளப்பறியது. ஆனால் 100 கோடி மக்கள் தொகையைக்கொண்ட ஒரு நாட்டில் இவர் போல் ஓரிருவர் மட்டுமே போதுமா என்ற கேள்வி எழுகிறது. குறைந்த பட்சம் அறிவியல், தொழிற்நுட்பத் துறையில் இருப்பவர்களாவது இது பற்றி சிந்திக்கவும் செயலாற்றவும் தொடங்கவேண்டியது நேரமிது.
மிகவும் நல்ல கட்டுரை...ஆனால் இதில் எனக்கு ஒரு பெரிய முரண்பாடு இருக்கிறது.
ஒரு குரு என்பவர் வெறும் அதிசியத்தை நிகழ்த்தி காட்டுபவர் அல்ல.
குரு என்பவர் சீடனுக்கு ஞானத்தை வ்ழுங்குபவர்.
நான் இதை ஒரு வரியில் எழுதிவிட்டேன்...அனால் குரு சிஷ்ய உறவு என்பது ஒரு கடல் போன்றது....
இதை பற்றி நேரம் இருக்கும்போது விவாதிப்போம்